ஹோம் /நியூஸ் /Madurai /

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்.. காதலியை வீடு புகுந்து கொன்ற காதலன் கைது

வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம்.. காதலியை வீடு புகுந்து கொன்ற காதலன் கைது

காதலி கொலை

காதலி கொலை

தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நோக்கில் காதலியை கொலை செய்ததாக ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆத்திரத்தில், காதலியை கழுத்தறுத்து படுகொலை செய்து தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை காளவாசல் அருகே பொன்மேனி பகுதியில் உள்ள குடியானவர் 1 வது தெருவைச் சேர்ந்த கணவன் மனைவியான பாண்டி- ஈஸ்வரி அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய மகளான அபர்ணா (19) பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட்டிப்பத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறி, இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல்  விவரம் அறிந்த பெண்ணின் பெற்றோர், வேறொருவருடன் இளம்பெண்ணுக்கு நிச்சயித்து அடுத்த மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதனையறிந்த ஹரிஹரன் பலமுறை மது அருந்திவிட்டு பெண் வீட்டிற்கு சென்று, அபர்னாவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

மதியம் 3 மணியளவில் அபர்னாவை பார்ப்பதற்காக அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார், அப்போது அபர்னாவின் தாயார் ஈஸ்வரி அவரை தடுத்ததாக கூறப்படுகின்றது. பின் அவருடைய தாயாரை தள்ளிவிட்ட ஹரிஹரன், அபர்னாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். உடனே அவருடைய தாயார் ஈஸ்வரி கூச்சலிட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர், ஆனால் சம்பவ இடத்திலேயே அபர்னா பரிதபமாக உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: என் குப்பை.. என் பொறுப்பு.. சென்னை மேயர் பிரியாவின் சேலஞ்

இந்நிலையில் தப்பியோடிய ஹரிஹரன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் ஹரிஹரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காதலியை கடத்தி செல்ல ஹரிஹரன் முயன்ற நிலையில் அவர் ஒத்துழைக்காததால், தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற நோக்கில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

First published:

Tags: Girl Murder, Lovers, Madurai