ஹோம் /நியூஸ் /மதுரை /

ரூ.1 லட்சத்துக்காக கடத்தலில் இறங்கிய டாக்டர்.. மதுரையில் பயங்கரம்!

ரூ.1 லட்சத்துக்காக கடத்தலில் இறங்கிய டாக்டர்.. மதுரையில் பயங்கரம்!

பில் கலெக்டரை கடத்திய அரசு மருத்துவர்

பில் கலெக்டரை கடத்திய அரசு மருத்துவர்

Madurai Kidnap | மதுரையில் மருத்துவரால் கடத்தி அறையில் அடைக்கப்பட்டிருந்த பில்கலெக்டரை போலீஸார் மீட்டனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் மாநகராட்சி பில்கலெக்டரை கடத்தி அறையில் அடைத்து வைத்த அரசு மருத்துவர் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் பகுதியில் வரி வசூல் செய்யும் மையத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் சரண்ராஜ். இவர், தனது நண்பர்களுடன் பெரியார் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து திடீரென கடத்திச் சென்றனர். இதுகுறித்து சரண்ராஜ் மனைவி வினிதா திடீர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தனிப்படை அமைத்த போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சரண்ராஜ் செல்போன் எண்ணை ட்ராக் செய்ததில் அவர் உசிலம்பட்டி பகுதியில் ஒரு மருத்துவமனையில் இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் அங்கு சென்று அதிரடியாக மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கான பகீர் காரணம் தெரியவந்தது.

மதுரை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் சந்திரன். இவர் , உசிலம்பட்டி - வத்தலகுண்டு சாலையில் ஓம் முருகா என்ற பெயரில் தனியாக மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர் சரண்ராஜிடம், தனது மருத்துவமனைக்கு மாசுகட்டுப்பாட்டு துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்று தருமாறு கடந்த ஆண்டு ரூ. 1,10,000 கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் எந்தவித சான்றிதழும் பெற்று தராமல் சரண்ராஜ் இழுத்தடித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த மருத்துவர் சந்திரன் தனது ஊழியர்களுடன் சேர்ந்து சரண்ராஜை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இந்த கடத்தலுக்கு சந்திரனின் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரியும் கண்ணதாசன், டிரைவர் அருண்பாண்டி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவர் சந்திரனிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஊழியர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Arrest, Crime News, Kidnap, Madurai