அவனியாபுரம் ஜல்லிகட்டு - முதல்வர் சார்பில் காரும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சார்பில் 2 டூவீலரும் பரிசாக வழங்கப்பட உள்ளது!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அதிக காளைகளை தழுவி முதல் இடத்தை பிடிக்கும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுறது. முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
களத்தில் நின்று விளையாடிய சிறந்த காளைக்கு முதல் பரிசாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலர் பரிசு வழங்கப்படுகிறது. 2வது பரிசாகவும் ஒரு டூவீலர் பரிசு வழங்கப்பட உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி - 6 சுற்றுகள் நிறைவு
அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் இதுவரை 150 வீரர்கள் களம் கண்டுள்ளனர். இது வரை 442 காளைகள் களம் கண்டு சென்று உள்ளது.
நண்பகல் 1 மணி நிலவரபடி மொத்தம் 680 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து ஜல்லிகட்டு போட்டிக்கு அனுமதிக்கபட்டு வரும் நிலையில் 52 காளைகள் உரிய சான்றிதழ்கள், உரிமையாளர் வராத காரணத்தால் அமைதி மறுக்கப்பட்டுள்ளது .