ஹோம் /நியூஸ் /மதுரை /

அடடே..! அரிட்டாபட்டிதான் சூப்பர்.. மதுரை கிராமத்தை பெருமைபடுத்திய தமிழக அரசு.. துள்ளிக்குதிக்கும் ஊர்மக்கள்!

அடடே..! அரிட்டாபட்டிதான் சூப்பர்.. மதுரை கிராமத்தை பெருமைபடுத்திய தமிழக அரசு.. துள்ளிக்குதிக்கும் ஊர்மக்கள்!

அரிட்டாபட்டி

அரிட்டாபட்டி

சுமார் 193 ஹெக்டேர் பகுதிகள் பாரம்பரிய பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Local18
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai | Madurai

  தமிழகத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் சூழல் மண்டலமாக மதுரை அரிட்டாபட்டியை தேர்வு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ளது அரிட்டாபட்டி. இங்கு ஏழு பாறை மலைகள் உள்ளன. அதில் முற்கால பாண்டியர் வடிவமைத்த குடைவரை சிவன் கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

  இந்த மலைகளை சுற்றி வாழ்ந்த பல அரிய உயிரினங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.

  இதன் காரணமாகவே இந்த இடம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டது இந்நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

  இதையும் படிங்க | தேவர் ஜெயந்தியின்போது பெண்கள் கல்லூரியில் அத்துமீறி நுழைந்த விவகாரம்- 4 பேர் மீது குண்டாஸ்

  அதன்படி அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 193 ஹெக்டேர் பகுதிகள் பாரம்பரிய பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனை அக்கிராம மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இது குறித்துக் கூறிய அரிட்டாபட்டி மலை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மனித இனம் வாழ பல்லுயிர் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Madurai, Melur Constituency