Home /News /madurai /

ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள் அணிவகுப்பு- காண்பதற்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு

ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள் அணிவகுப்பு- காண்பதற்கு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு

மதுரை அமெரிக்கன் கல்லூரி

மதுரை அமெரிக்கன் கல்லூரி

வானில் ஒரே நேர்கோட்டில் 7 கோள்கள் தோன்றும் அபூர்வ நிகழ்வை தொலைநோக்கி வழியாக காண்பதற்கு இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இதில் பூமி ஒருமுறை சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகின்றன. இதே போல் ஒவ்வொரு கோள்களும் சூரியனை சுற்றிவர குறிப்பிட்ட நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. கோள்களின் சுற்றுவட்ட பாதையில் ஒன்றையொன்று சந்திக்கும் அபூர்வ நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. இதன்படி சூரியனை சுற்றி வலம் வரும் 7 கோள்கள் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அபூர்வ நிகழ்வு 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் தோன்றுகிறது.

இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் கூறியதாவது, ‘சூரியனை சுற்றி வரும் கோள்கள் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்வு. இதற்குமுண்பு இந்த நிகழ்வு 2004ல் காணப்பட்டது. மீண்டும் இன்று (ஜூன்-27) அதிகாலை 04.30 மணி முதல் 05.30 மணி வரை காணப்பட்டது. இந்த நிகழ்வை வெறும் கண்களாலும் பார்க்க இயலும். தொலைநோக்கி வழியாக மேலும் தெளிவாக பார்க்க முடிந்ததாகவும் கூறினார்.

இந்த கோள்களின் அணிவகுப்பிற்கு இடையே நிலவு தோன்றுவது கூடுதல் சிறப்பாகும். கிழக்கு திசையில் தென்கிழக்கு வானில் இந்த அணிவகுப்பை காண இயலும். இதை இன்று தொலைநோக்கி வழியாக தெளிவாக காண்பதற்கு அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை பல பொதுமக்களும் பார்வையிட்டு சென்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி