ஹோம் /நியூஸ் /மதுரை /

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - வெற்றி வாகை சூடிய காளை, காளையர் - முழு விவரம் இதோ

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - வெற்றி வாகை சூடிய காளை, காளையர் - முழு விவரம் இதோ

அபி சித்தர்

அபி சித்தர்

இதில் 26 காளைகளை அடக்கி அபி சித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிகட்டு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக உதயநிதிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஜல்லிக்கட்டின் தொடக்கமாக முதலில் முனியாண்டி சாமி காளை படி அவிழ்க்கப்பட்டது. பாரம்பரிய வழக்கப்படி அதனை யாரும் பிடிக்கவில்லை.

இதனை தொடர்ந்து காளைகள் சீறிப் பாய, காளையர்கள் அதனை அடக்க முயற்சிக்கும் காட்சிகளை ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். 8வது சுற்று வரை 219 மாடுபிடி வீரர்கள் களம் கண்ட நிலையில், சில காளைகள் காளையர்களை தன் பக்கம் நெருங்கவிடாமல் களமாடின. சில காளைகள் தன்னை அடக்க முயன்ற காளையர்களை தூக்கிவீசிச் சென்றன.

உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ், மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் விழா மேடையில் இருந்து ஜல்லிகட்டு நிகழ்வை கண்டு ரசித்தனர். நிகழ்வை உதயநிதியோடு நடிகர் சூரியும் இணைந்து கண்டுகளித்தார்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள 522 வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்த நிலையில் 327 வீரர்கள் மட்டும் வந்திருந்தார்கள். இதில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற் பரிசோதனையின் போது 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆள்மாறாட்டம் செய்த ஒருவர் மற்றும் மதுபோதையிருந்த இருவர் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஒருவர் விளையாடாமல் சென்றார். மொத்தம் 24 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் ஜல்லிகட்டு போட்டியில் மொத்தம் 303 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இதில் 26 காளைகளை அடக்கி அபி சித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். 20 காளைகளை அடக்கி அஜய் என்பவர் 2ஆம் இடமும் 12 காளைகள் அடக்கி ரஞ்சித் 3ஆம் இடமும் பிடித்தார்.

மேலும் சிறந்த மாடுகள் பட்டியலில், முதலிடத்தை புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வன் மாடு பிடித்தது. இரண்டாம் இடத்தை புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் மாடும் 3ம் இடத்தை உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டானி ராஜா மாடும் பிடித்தது.

முதல் பரிசு பெற்ற அபி சித்தருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார். இரண்டாம் பரிசு அஜய்க்கு அமைச்சர் உதயநிதி சார்பில் டூவீலர் வழங்கப்பட்டது.

First published:

Tags: Alanganallur, Jallikattu, Madurai