25 காளைகளை அடக்கி அபி சித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். 20 காளைகளை அடக்கி அஜய் என்பவர் 2ஆம் இடமும் 12 காளைகள் அடக்கி ரஞ்சித் 3ஆம் இடமும் பிடித்தார்.
17:19 (IST)
சிறந்த மாடுகள்
1. புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வன்
2. புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் மாடு
3. உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டானி ராஜா மாடு
16:17 (IST)
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: 9 சுற்றுகள் நிறைவு
9 வது சுற்றில் 25 வீரர்கள் களம் கண்டு சென்றனர்
9 சுற்றிலும் சேர்ந்து 270 வீரர்கள் களம் கண்டு சென்று உள்ளனர்
அடுத்து இறுதி சுற்று..
16:14 (IST)
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதி சுற்று
10வது சுற்று 32 வீரர்கள் நீளம் ,மஞ்சள், ரோஸ் கலர் உடையுடன் களத்தில் இறங்க தயார் நிலையில் உள்ளனர்.
15:54 (IST)
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு:
சிறந்த காளைக்கான முதல் பரிசு, அதிக காளைகளை தழுவிய வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் ஸ்டாலின் கார் வழங்கப்பட உள்ளது!
களம் கண்டு முதல் பரிசு பெறும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.
15:20 (IST)
அலங்காநல்லூர் ஜல்லிகட்டு: 9 வது சுற்று தொடக்கம்
9 வது சுற்றில் 25 வீரர்கள் களத்தில் உள்ளனர்
8 சுற்றிலும் சேர்ந்து 245 வீரர்கள் களம் கண்டு சென்று உள்ளனர்
8 சுற்று நிறைவில் 620 காளைகள் களம் கண்டு சென்று உள்ளது.
14:59 (IST)
அதிக காளைகளை தழுவி முதல் பரிசை பெறும் மாடுபிடி வீரருக்கு கன்றுடன் கூடிய பசு மாடு சிறப்பு பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக காரும் வழங்கப்படும்