ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரை எய்ம்ஸ்.. ஒன் சைடு கேம் ஆடும் மத்திய அரசு - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ்.. ஒன் சைடு கேம் ஆடும் மத்திய அரசு - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு அரசியல் ரீதியான ஒன்சைட் கேம் ஆடுவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Madurai, India

  எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் ஒன்றிய அரசு அரசியல் ரீதியான ஒன்சைட் கேம் ஆடுவதாகவும், மகளிர் உரிமை தொகை வழங்குவதற்காக பிற மாநிலங்களின் தரவுத்தளம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  மதுரை சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

  "ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது.  பிலாஸ்பூர் எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது.

  பல திட்டத்துக்கு பிரதான் மந்திரி என பெயர் வைத்து மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக, பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு 75% மாநில அரசின் பங்கு, 25% பங்கு தான் ஒன்றிய அரசின் பங்கு. எனவே, ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக்கொண்டு எல்லா திட்டங்களுக்கும் பிரதான் மந்திரி பெயரை வைத்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதை திருத்தியே ஆக வேண்டும். இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்" என தெரிவித்தார்.

  Also Read: பிலாஸ்பூர் எய்ம்ஸ் பசுமை மருத்துவமனையாக அறியப்படும் - பிரதமர் மோடி பெருமிதம்

  மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த கேள்விக்கு, "மகளிர் உரிமை தொகை அளிப்பது தொடர்பாக பிற மாநிலங்களில் என்ன விதமான தரவுத்தளம் (Database) உள்ளது. ஒரு திட்டத்தை எவ்வாறு, எப்படி குழு அமைத்து செயல்படுத்துகிறார்கள் என ஆய்வு செய்து வருகிறோம்" என்றார்.

  மதுரை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்த கேள்விக்கு,

  "மதுரையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்துவது கால தாமதம் ஆகிறது. குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டு ஆகிவற்றிற்கு வரி விதிப்பது தொடர்பாகவும், ஜி.எஸ்.டி.க்கான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்பது குறித்தும் அறிக்கைகள் வருவது தாமதம் ஆவதே காரணம்.ஜி.எஸ்.டி மரபு படி 3 மாதத்திற்கு ஒருமுறை கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, அறிக்கைக்காக காத்திருக்காமல் விரைவாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அது பரிசீலனையில் உள்ளது" என கூறினார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Aiims Madurai, Madurai, Tamil News