ஹோம் /நியூஸ் /மதுரை /

ஆவின் பால் தாமதமாக விநியோகிக்கப்படுவதாக முகவர்கள் போராட்டம்

ஆவின் பால் தாமதமாக விநியோகிக்கப்படுவதாக முகவர்கள் போராட்டம்

ஆவின் பால் முகவர்கள் போராட்டம்

ஆவின் பால் முகவர்கள் போராட்டம்

காலை 4 மணிக்கு விநியோகம் செய்ய வேண்டிய 3 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு  விநியோகம் செய்வதாக புகார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரையில் ஆவின் பாலை காலதாமதமாக விநியோகம் செய்வதாக கூறி அதிகாலை 1 மணி நேரத்திற்கும் மேலாக  முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து நாள்தோறும் மாவட்டத்தில் உள்ள 47 ஆவின் பாலகங்கள் மற்றும் 390 டெப்போக்கள் மூலமாக மாதந்தோறும் 1.94 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  இதற்கான பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய ஒப்பந்த வாகனங்கள் மூலம் அந்தந்த டெப்போக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காலை 4 மணிக்கு விநியோகம் செய்ய வேண்டிய 3 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு  விநியோகம் செய்வதாகவும், பால் டெப்போகளில் பால்கள் விநியோகம் செய்யாமல் வேறொரு இடத்திற்கு வந்து வாங்கி செல்லுமாறு ஆவின் கண்காணிப்பாளர் கூறுவதாகவும் முகவர்கள் மதுரை ஆவின் நிறுவன  வாசலில் முற்றுகையில் ஈடுபட்டு 1 மணி நேரத்திற்கு பின் கலைந்து சென்றனர்.

  இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு குட் நீயூஸ்..! 3 மாசம் ஆனாலும் கெட்டுப்போகாத ஆவின் பால் அறிமுகம் - இனி அதிகாலையில் எழுந்திருக்க வேண்டாம்

  இதுதொடர்பாக மதுரை ஆவின் பொது மேலாளரிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கும்பொழுது, "  பால் அனைத்து நாட்களிலும் முறையாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது , இன்று பால் தயாராக தாமதமாகிவிட்டது, அதிலும் நீண்ட தூரம் உள்ள பால் டெப்போகாளில்பால் முறையாக விநியோகம் செய்யப்பட்டுவிட்டது அருகில் உள்ள பால் டெப்போகாளில் மட்டும் தாமதமாகிவிட்டது, என்றார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Aavin, Madurai