Home /News /madurai /

நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள்... இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் - மதுரை ஆதீனம்

நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள்... இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் - மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்

Madurai : இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு, கோவில் நிர்வாகத்தை நீதிபதிகள், அடங்கிய குழுவிடம் ஒப்படையுங்கள் என மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் கூறினார். 

நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார்.  அவர் நடித்த  படத்தை பார்காதீர்கள் என மதுரையில் நடந்த துறவியர் மாநாடு நிறைவு பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள் பேசினார்.

விசுவ ஹிந்து பரிஷத் (VHP) யின் அறவழி காட்டும் ஆன்றோர்கள் பேரவை சார்பாக மதுரையில் துறவியர் மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.  இறுதி நாளான ஞாயிறு மாலை மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில்,  துறவியர்,  ஆதினங்கள்,  மடாதிபதிகள் பங்கேற்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர்.

கோவை காமாட்சிபுரம்  ஆதினம்  சிவலிங் கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், தருமை ஆதினம் பல்லக்கு தடை பட்டது. ஆதினங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதல்வரை சந்தித்தோம். பல்லக்கு அனுமதி கிடைத்தது. சாமி இல்லை,  தெய்வம் இல்லை  என்று கோவில் முன் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறிய அவர், பள்ளிவாசல், தேவாலயம் முன் இது போன்று கல்வெட்டு வைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இங்கு இந்து,  இஸ்லாமியர்கள்,  கிறித்துவர்கள் என அனைவரும் இணக்கமாக உள்ளோம். விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டும். அன்னதானத்திற்கு அனுமதி வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலை உள்ளது. வெட்கமாக உள்ளது. மடாதிபதிகள் பராமரிக்க கூடிய கோவில்கள் மிகவும் சுத்தமாக உள்ளன. திருமந்திரத்தை படித்தவர்கள், வாசகங்களை பயண்படுத்தியவர்கள் வாழ்வில் உயர்வார்கள் என்பதற்கு அண்ணாவே சிறந்த உதாரணம்.

சாதி யில்லை என கூறுபவர்கள், சாதி இல்லை என ஒரு சட்டத்தை ஏன் இயற்ற கூடாது? இந்துக்கள் மீதான பொய்பிராசரம் இனி மேல் எடுபடாது . நடராஜரை கேவலமாக பேசுபவரை ஏன் கைது செய்ய முடியவில்லை. நடராஜரை அவமான படுத்தியவனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு, கோவை காமாட்சிபுரம்  ஆதினம்  சிவலிங் கேஸ்வர சுவாமிகள் பேசினார் .

இந்து மதத்திற்கு  விரோதமாக பேசினால்,  அவர்களுக்கு சிறந்த பாடம் கற்று தர வேண்டும்

மன்னார்குடி ஜீயர் ராமனுஜர் பேசுகையில், தேசதுரோக முஸ்லிம்களுக்கு நாம் விரோதம். மத மாற்றம் நடைபெறுகிறது. CAA சட்டத்திற்கு ஏன் பயப்பட வேண்டும்? பிற மதங்களை சேர்ந்தவர்கள்,  தான் CAA வை எதிர்கின்றனர் ஏன்? மதம் மாறியவர்கள் தான்,  CAA வை எதிர்க்கிறார்கள். அவர்கள் தேச துரோகிகள்தான். மதம் மாற்றத்தால் தேசத்துக்கு அபாயம் உண்டு.

இந்து மதத்திற்கு  விரோதமாக பேசினால்,  அவர்களுக்கு சிறந்த பாடம் கற்று தர வேண்டும். ஆப்கானிஸ்தான்,  பங்களாதேஷ்,  பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் இந்து நாடு தான். அவர்கள் இந்துக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். மதம் மாற்றம் தேசிய அபாயம், அதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு மன்னார்குடி ஜீயர் ராமனுஜர் பேசினார்.

மாணவர்களை நல் வழி படுத்த வேண்டும்

பெண் துறவி சென்னை யதுஸ்வரி  பேசுகையில், சிறு வயதில் இருந்தே அற நெறி வாழ்வையும், நீதிகளையும் கல்வி திட்டத்தில் பாடமாக வைக்க வேண்டும். தற்போது ஆசிரியர்கள், மாணவர்களை பார்த்து பயப்படுகின்றனர். மாணவர்களை நல் வழி படுத்த வேண்டும். அற வழிகல் வி மூலம் நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்.

குழந்தைகள் தற்போது மால்களுக்கும்,  கடற்கரைகரைக்கு செல்வதற்கு தான் விரும்புகின்றனர். கோவில்களுக்கு செல்வதை தற்போதைய குழந்தைகள் விரும்பாமல் இருக்கின்றனர்.  இதை மாற்ற வேண்டும். சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தேச பக்தி,  உள்ளிட்ட பக்திகளை ஊட்ட வேண்டும் என்று யதுஸ்வரி  பேசினார்.

தமிழகத்திலும் பசு வதை தடை சட்டம் கொண்டு வர வேண்டும்

மதுரை சின்மயா மிஷன் சிவயோகாநந்தா பேசுகையில், இந்துக்களின் ஓட்டு,  இந்து மதத்தை ஆதரிப்பவர்களுக்கே வழங்க வேண்டும். இந்து துறவிகள் விசயத்தில் அரசாங்கம் தலையிட்டால்,  துறவிகளுக்கு ஆதரவாக சக துறவிகள், இந்துக்களுக்கு  குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இந்துக்களை, இந்து மதத்தை  முழுமையாக பாதுகாக்க வேண்டும்.

சமஸ்கருதத்திற்கும்,  தமிழுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பலர் செயல்படுகின்றனர். பசுவை மத அடையாளமாக பார்க்கிறோம். பசுவை பெற்றோரை போல் மதிக்க வேண்டும். குஜராத், உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் பசு வதை தடை சட்டம் கொண்டு வந்தது போல், தமிழகத்திலும் பசு வதை தடை சட்டம் கொண்டு வர வேண்டும்.

அற நிலையத்துறையின்  கீழ் உள்ள கோவில்களில் கோ சாலை தொடங்க வேண்டும். பசு இறைச்சி ஏற்றுமதியை நிறுத்த வேண்டும். இவ்வாறு மதுரை சின்மயா மிஷன் சிவயோகாநந்தா பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்து சமுதாயத்தை அச்சுறுத்த நினைக்கிறார்கள்

விசுவ ஹிந்து பரிஷத் VHP பொதுசெயலாளர் மிலிந்த் பிராண்டே பேசுகையில், இந்துசமுதாயத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் அமைப்புகள், இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் பேசுகின்றனர். இஸ்லாமியயர்கள் இந்துகளுக்கு சவால் விடுகின்றனர். கேரளாவில் நடைபெற்ற PFI ஊர்வலத்தில் இந்துகளே சாவதற்கு தயாராக இருங்கள் என கூறுகின்றனர். மேற்கு வங்கத்தில் இந்துகளுக்கு,  அதிகம் வசிக்கும் கிராமங்களில் இஸ்லாமியர்கள் தாக்கினர். அவ்வாறு தாக்குதல் நடத்த வில்லை என மம்தா அரசு மறுக்கிறது.

ஜமாத் இ இஸ்லாமிக், இந்து சமுதாயத்தை அச்சுறுத்த நினைக்கிறார்கள். இவை அனைத்தையும் பார்த்து,  கடவுள் சிவன்,  முருகன் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டார்கள். இந்துக்கள் பயப்பட கூடாது. அச்சமற்ற வாழ்க்கை வாழ வேண் டும். நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். கொல்லப்படுகின்றனர்.

நம்மை தற்காத்து கொள்ள வேண்டும்.  இதற்கு தயாராக இருக்க வேண்டும். நம் முன்னோர்கள்,  இந்து தர்மத்தை உலகம் முழுவதும் பரப்பினர். ஆனால் இன்று, நம்  நாட்டில் இந்து மதத்தை சேர்தவர்களை மாதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். இதை தடுக்க வேண்டும். இவ்வாறு  VHP பொதுசெயலாளர் மிலிந்த் பிராண்டே பேசினார்.

கோவில் நிர்வாகத்தை நீதிபதிகள், அடங்கிய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்

மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்த சுவாமிகள்  பேசுகையில், எங்கேயும் நிம்மதி இல்லை. மனைவி சரி இல்லை,  குழந்தை சரி இல்லை என கூறுகின்றனர். ‘பாருக்குள்ளே நல்லநாடு பாரத நாடு’ என்று பாரதியார் அன்று பாடினார். பாரதியார்  இன்று இருந்திருந்தால், செந்தமிழ் நாடு எனும் போதினேலே டாஸ்மாக் பாயுதே நாட்டிலே என பாடியிருப்பார் என்று கூறினார்.

ஆதினங்கள் அரசியல் பேசலாமா? என கேட்கின்றனர். நான் பேசாமல் யார் பேசுவார்கள்? ஆனால் , அரசியல் வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை? இலங்கையில் ராஜபக்சே, கோவிலை இடித்தான் கெட்டான். அது போல் இங்கும் கோவிலை இடித்தவர்கள் கெட்டார்கள். எஸ்ரா சற்குணம், மேடையில்  பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசுகிறார். அதை கேட்டு,  முதல்வர் ஸ்டாலின் முகத்தில் புன்னகை பூக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திராவிடபாரம்பரியம் என கூறுகிறார்கள். ஆனால் விபூதி பூச மறுக்கிறார்கள். விபூதியை  கீழே கொட்டுகிறார்கள். நடராஜ சாமி, முருகன் உள்ளிட்ட சாமிகளை கேவலமாக பேசுகின்றனர். நடிகர் விஜய் நம்ம விநாயகர் கடவுளை பற்றி குறைத்து பேசுகிறார். அவர் நடித்த  படத்தை பார்காதீர்கள். பேச்சாளர்  சாலமன் பாப்பையாவை பல்லக்கில் வைத்து தூக்குகின்றனர். ஆனால் தருமை ஆதினத்தில் பல்லக்கு  தூக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் திருக்குறள் இல்லை. அவ்வை பாடல் இல்லை,
இந்து என்றால் திருடன் என்றார்கள். சமயபுரம் மாரியம்மனை துஷ்ட தேவதை என கூறுகின்றனர். ஆனால் உண்டியல் வசூல் மட்டும் இனிக்கிறதா? பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை கோவில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள் . கால் ரூபாய் தெரியாமல் வாங்கியதற்காக தனது மருமகன் தலையை,  வெட்டினான் மன்னன் அன்று, ஆனால் இன்று அப்படியா..?

Must Read : பள்ளி மாணவர்களுக்கு... அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

திருமூலர்  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என கூறியதை ,  அண்ணாதுரை எடுத்து  பேசினார்.  ஆன்மீக வாசகங்களை திருடி அரசியல் பேசியவர்கள்,  இன்று திராவிடம் என பேசுகின்றனர்.
அற நிலையத்துறை அறம் இல்லாமல் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட்டு, கோவில் நிர்வாகத்தை நீதிபதிகள், அடங்கிய குழுவிடம் ஒப்படைங்கள்.

மதுரை எம்.பி., வெங்கடேசன்,  ஆதினங்கள் எல்லாம் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும் என கூறி உள்ளார். MP அவர்களே,  என்னிடம் ஒரு வாரம் வந்து தங்கி பாருங்கள். எனது பணிகள்,  பூஜை முறை, எனது உணவு முறையை  பாருங்கள், சுருண்டு போவீர்கள் என்று கூறினார்.
Published by:Suresh V
First published:

Tags: Madurai, Madurai Adhinam, Vijay

அடுத்த செய்தி