முகப்பு /செய்தி /மதுரை / ரீல்ஸ் மோகத்தில் பைக்கில் கெத்தாக சாகசம்.. கொத்தாக தூக்கிய மதுரை போலீசார்..!

ரீல்ஸ் மோகத்தில் பைக்கில் கெத்தாக சாகசம்.. கொத்தாக தூக்கிய மதுரை போலீசார்..!

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

Madurai arrest | மதுரையில் ரீல்ஸ் மோகத்தில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை தல்லாகுளம் வல்லபாய் பட்டேல் சாலையில் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசம் செய்து அதனை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் செய்து வருகின்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அச்சத்துடனே சாலையில் பயணம் செய்து வருகின்றனர்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த மக்கள் காவல்நிலையத்தை நாடினர். பொதுமக்களின் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதி வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், இளைஞர்கள் சிலர் பைக்கில் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து யூடியூப் பக்கத்தில் வெளியிடுவது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் மீது மனித உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வானம் ஓட்டுவது, பொது மக்களை அச்சுறுத்துவது உட்பட 3 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்து சேக் முகமது, நல்லசிவம், மதன்குமார்,சஜன், சபரிமலை ஆகிய 5 பேரை மதுரை தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள், கேமரா, ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.

First published:

Tags: Arrest, Local News, Madurai