முகப்பு /செய்தி /மதுரை / போட்டோ ஸ்டூடியோ வருமானம் போதவில்லை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்க முயன்ற 3 மதுரை இளைஞர்கள் கைது

போட்டோ ஸ்டூடியோ வருமானம் போதவில்லை: ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா விற்க முயன்ற 3 மதுரை இளைஞர்கள் கைது

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

கைது செய்யப்பட்ட இளைஞர்கள்

Madurai Kanja Aquest Arrest | கோவையிலிருந்து கஞ்சாவை வாங்கி கொண்டு மதுரை வரும்போது வாகன சோதனையில் சிக்கினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் ஆடம்பர வாழ்க்கைக்காக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை சதாசிவம் நகர் பகுதியை சேர்ந்த ரிஷிகேஷ் (23) அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (23) அகமது அனுஷ் (22) உள்ளிட்ட மூன்று பேரும் இணைந்து போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருமானம் ஈட்டி வந்தனர். ஸ்டூடியோ மூலம் கிடைக்கும் வருவாய் மூவரின் ஆடம்பர செலவுக்கு போதவில்லை என நினைத்து குறுக்கு வழியில் மிக வேகமாக பணம் சம்பாதிக்க  கஞ்சா விற்பனை செய்யலாம் என முடிவு செய்தனர்.

இதனால் கோவையிலிருந்து கஞ்சாவை வாங்கி கொண்டு தங்களுடைய இருசக்கர வாகனங்களில் மதுரைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முயன்றபோது  எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது சிக்கினர்.

இதனையடுத்து மூன்று பேரும்  விசாரணை நடத்திய போலீசார் அவர்களிடம்  இருந்து 1 கிலோ 200 கிராம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும்   மூன்று பேர் மீதும் கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: வெற்றி

First published:

Tags: Crime News, Local News, Madurai