ஹோம் /நியூஸ் /மதுரை /

குட்கா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் உள்பட 2 பேர் மதுரையில் கைது!

குட்கா கடத்தலில் ஈடுபட்ட இலங்கை இளைஞர் உள்பட 2 பேர் மதுரையில் கைது!

கைது செய்யப்பட்டவர்கள்

கைது செய்யப்பட்டவர்கள்

Madurai arrest | மதுரையில் போலி ஆதார் கார்டு தயாரித்து அதன் மூலம் போலி பாஸ்போர்ட் பெற முயற்சித்த இலங்கை வாலிபர் உள்ளிட்ட இருவர் கைது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரையில் போலி ஆதார் கார்டு தயாரித்து அதன் மூலம் போலி பாஸ்போர்ட் பெற முயற்சித்த இலங்கை வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட 16.5 கிலோ குட்காவை சட்ட விரோதமாக எடுத்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மதுரை ஹார்விபட்டியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிவராஜ் ஆகியோர் என தெரியவந்தது.

இதில் இலங்கையைச் சேர்ந்த சிவராஜ் (32), கள்ளத் தோணியில் ராமேஸ்வரம் வந்து திருப்பத்தூரை சேர்ந்த செல்வம் என்ற ஏஜென்டிடம் சென்னையில் இருப்பது போல போலியாக டிரைவிங் லைசன்ஸ் பெற்று அதன் மூலம் பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறார். அதையடுத்து அந்த பாஸ்போர்ட் மூலம் இலங்கை சென்று பின் அங்கிருந்து திரும்பி தமிழகத்திற்கு வந்தபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்துள்ளது.

இதனால் மீண்டும் போலி பாஸ்போர்ட் எடுப்பதற்காக மதுரையை சேர்ந்த காசிவிஸ்வநாதன் மூலம் போலி ஆதார் பெற்று அதன் மூலம் லைசன்ஸ், பார்ஸ்போர்ட் பெற முயற்சி செய்து வந்துள்ளார். அதற்குறிய பணத்தேவை காரணமாக  தடை செய்யப்பட்ட குட்காவை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

First published:

Tags: Arrest, Local News, Madurai