ஹோம் /நியூஸ் /மதுரை /

பாண்டியநாட்டின் அடையாளம் எங்கே? மதுரை ரயில் நிலையத்தில் 3 மீன் சிலைகளை நிறுவ கோரிக்கை..!

பாண்டியநாட்டின் அடையாளம் எங்கே? மதுரை ரயில் நிலையத்தில் 3 மீன் சிலைகளை நிறுவ கோரிக்கை..!

மதுரை ரயில்நிலையத்தின் மீன் சிலைகள்

மதுரை ரயில்நிலையத்தின் மீன் சிலைகள்

சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் நவம்பர் 2021 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் சிலை நிறுவப்படவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai

பாண்டிய மன்னர்களின் நினைவு கூறும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் கொண்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர்  திருமுருகன் உயர்நீதிமன்றம்  மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , அதில், தமிழ்நாட்டில் 3வது முக்கிய நகரமாக மதுரை மாநகரம் அமைந்துள்ளது.

மதுரையை சங்க காலத்தில் ஆண்ட பாண்டிய மன்னனின் சின்னமாக மீன்கள் இருந்தது. அதன் நினைவாக மதுரை ரயில் நிலையத்தில் கிழக்கு  நுழைவு வாயிலில்  1999 ஆண்டு 3 மீன்கள் கொண்ட சிலை 15 அடி உயரம் 3 டன்கள் எடையில் அமைந்திருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை ரயில் நிலையத்தை புதுப்பித்து சீரமைப்பதற்காக மீன் சிலைகள் அகற்றப்பட்டது. அதன் பின்பு தேசியக்கொடி கம்பங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டு வேலைகள் முடிவடைந்தது இருந்தும் மீன்கள் சிலை வைக்கப்படவில்லை.

பின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் நவம்பர் 2021 ஆம் ஆண்டு ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்து மீன் சிலை மீண்டும் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மீன்கள் சிலை மதுரை ரயில் நிலையம் முன்பு வைக்கப்படவில்லை.

ALSO READ | தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்யும் - செல்லூர் ராஜு

எனவே, தமிழ் சங்க காலத்தில் பாண்டிய மன்னர்களை நினைவு கூறும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில் முன்பு வைக்கப்பட்டிருந்த 3 மீன்கள் கொண்ட சிலையை மீண்டும் அவ்விடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் R.மகாதேவன்,  J. சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,  வழக்கு குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  2 வாரம் ஒத்திவைத்தனர்.

Published by:Anupriyam K
First published:

Tags: Madurai, Madurai High Court