Home /News /madurai /

லேப்டாப் சார்ஜ் போட்ட போது மின்கசிவு.. மலமலவென தீ பரவியதால் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசம்... மதுரையில் பரபரப்பு

லேப்டாப் சார்ஜ் போட்ட போது மின்கசிவு.. மலமலவென தீ பரவியதால் வீட்டிலிருந்த பொருட்கள் எரிந்து நாசம்... மதுரையில் பரபரப்பு

Madurai | லேப்டாப் சார்ஜ் போடும்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் வீடு முழுவதும் உள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    திருமங்கலம் முகமதுஷாபுரம் தேவர் தெருவில் குடியிருப்பவர் மாணிக்கம்(28). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி. இந்துமதி  இரவு 7 மணி அளவில் லேப்டாப் சார்ஜ் இல்லாததால் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு மெத்தையில் வைத்துள்ளார்.

    அப்போது மின்கசிவினால் திடீரென லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் மளமளவென தீ எரிய தொடங்கியது.இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராணி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் தீ பற்றி எரிய தொடங்கியதால் தீயை அணைக்க முடியவில்லை.

    Read More : மதுரை ஷூட்டிங் ஸ்பாட்... வண்டியூர் தெப்பக்குளம் - இந்த சீனெல்லாம் இங்குதான் எடுக்கப்பட்டதா

    உடனடியாக திருமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.் திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. லேப்டாப் சார்ஜ் போடும்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் வீடு முழுவதும் உள்ள பொருட்கள் எரிந்து நாசமான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது
    Published by:Elakiya J
    First published:

    Tags: Fire accident, Laptop charging failure

    அடுத்த செய்தி