முகப்பு /செய்தி /மதுரை / இன்ஸ்டாவில் பழகி மாணவி கடத்தல்.. விசாரணையில் குடும்ப பெண்களும் ஏமாந்த திடுக்கிடும் தகவல்

இன்ஸ்டாவில் பழகி மாணவி கடத்தல்.. விசாரணையில் குடும்ப பெண்களும் ஏமாந்த திடுக்கிடும் தகவல்

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai Posco Arrested | இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவியிடம் பழகி கடத்தி சென்ற குளித்தலை வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் விசாரணையில் பல பெண்களை சீரழித்ததும் அம்பலமானது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவிக்கு தந்தை இல்லாத நிலையில், அவரது அம்மா லெட்சுமி கூலி வேலை பார்த்து மகளை படிக்க வைத்து வந்தார். இந்த நிலையில் அந்த சிறுமி கடந்த சனிக்கிழமை அன்று காணவில்லை என சிறுமியின் தாயார் லட்சுமி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி பயன்படுத்திய செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது சிறுமி கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த நபரிடம் அடிக்கடி போனில் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மேலவாத்தியம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சரண்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். சரண்ராஜ் அங்குள்ள ஹோட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்ததும், இன்ஸ்டாகிராம் மூலம் இந்த சிறுமியிடம் அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதாக கூறி நட்பாக பழகி பின்னர் காதலிப்பதாக கூறியுள்ளார்.

சரண்ராஜின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த சனிக்கிழமை பள்ளி செல்வதாக கூறிய மாணவி அவருடன் குளித்தலைக்கு சென்று தங்கியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மாணவியை மீட்ட போலீசார் சரண்ராஜை கைது செய்து மதுரை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

Also see... அந்தியூர் திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்து

top videos

    அப்போது பல விஷயங்கள் அம்பலமானது. இந்த மாணவி போன்று பல்வேறு பள்ளி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களிடம் இதே போல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவர்களை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. அதன் பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    First published:

    Tags: Crime News, Instagram, Madurai, Pocso