போக்குவரத்து நெரிசலை சீரமைக்க மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியை மையமாக கொண்டு புதியதாக ஒரு பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மாநகராட்சி மேற்கு வாயில் பகுதியில் தொடங்கி தல்லாகுளம், கோரிப்பாளையம், ஏ.வி பாலம் வழியாக அண்ணா சிலை வரை 2கி.மீ தொலைவுக்கும். நேரு சிலை பகுதியில் இருந்து மேற்கு நோக்கியும், கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து மேற்கு நோக்கியும் இரு பிரிவுகளுடன் சேர்த்து மொத்தம் 3கீ.மீ நீளத்திலும், 10 மீட்டர் உயரத்திலும் இப்பாலமானது அமைய உள்ளது.
கோரிப்பாளையத்தில் இருந்து ஏ.வி பாலத்திற்கு இணையாக வலதுபுறம் செல்லும் இப்பாலம் அண்ணா சிலை அருகே கீழிறங்கும். இதன் அகலம் 12மீட்டர். இப்பாலத்திற்கான மதிப்பீடு தயாரிப்பு பணிகளில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர், இப்பணிகள் முடிவு பெற்று அரசின் ஒப்புதலுக்கு பின் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாலம் ஒருவழி பாதையாக அமையும், நகரின் வடக்கு பகுதியான கே.புதூர், கே.கே.நகர், தல்லாகுளம், கோரிப்பாளையம், செல்லூர் பகுதியில் உள்ளவர்கள் நகருக்குள் எந்தவித இடையூறும் இல்லாமல் செல்ல இயலும், அதே சமயம் இங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்பவர்கள் தரைவழியை பயன்படுத்த வேண்டும் அதனால் இங்கு ஏற்படும் வாகன நெரிசல் வெகுவாக குறையும் என்று நெடுஞ்சாலை துறை உதவி இயக்குநர் குட்டியான் கூறியுள்ளார்.
செய்தியாளர் - அருண் பிரசாத், மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai