ஹோம் /நியூஸ் /மதுரை /

ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆட கூடாது... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆட கூடாது... நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai High court | கடுமையான நிபந்தனைகளை விதித்து கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai | Madurai | Tamil Nadu

கோயில் திருவிழாவில் கிராமிய நிகழ்வான கரகாட்டம் கலைநிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தைச் சார்ந்த மாரிச்சாமி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், எங்கள் கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும்  காளியம்மன் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் நவம்பர் 8 தேதி இரவு கிராமிய கலை நிகழ்வான  கரகாட்டம்  நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.  எனவே கிராமிய கலை நிகழ்வான கரகாட்டம் நடத்த அனுமதியும், நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு நீதிபதி சதிகுமார சுகுமார குரூப் முன் விசாரணைக்கு வந்தது. நிபந்தனைகளுடன் கரகாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க | கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மதுரை - காசி இடையே சுற்றுலா ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதில், கரகாட்ட கலை நிகழ்வின்போது, ஆபாச நடனம் இருக்கக்கூடாது; நாகரிகமான உடைகள் அணிய வேண்டும்; இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது; எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது; ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது; நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது; நிகழ்ச்சி இரவு 7:00 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்; விதிகளை மீறும் பட்சத்தில் போலீசார் நிகழ்வை ரத்து செய்யலாம் என கடுமையான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Festival, Madurai High Court