பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக
அதிமுக இந்த நிலைமைக்கு வந்து விட்டது எனவும், அ
திமுகவுக்கு யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட அதிமுகவை மீட்க வேண்டும் என்றும் தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி கூறுகையில், "மாநில பொதுக்குழு கூட்டத்தில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழ் பாடத்தில் மாணவர்கள் பெருந்தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்ய வேண்டும், அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தல், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி காக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆதீனங்கள் ஆதீனமாக உலவ காரணம் திராவிட இயக்கம் தான். சனாதன தத்துவப்படி ஆதீனங்கள் ஆதீனமாக இருக்க முடியாது. அந்த அந்தஸ்தை வாங்கிக் கொடுத்ததே திராவிட இயக்கம் தான்.
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையே யார் எதிர்கட்சி என்ற போட்டி தற்போது எதிர்கட்சிக்குள் யார் எதிர்கட்சி என்ற போட்டி வரும் அளவுக்கு கட்சியை உடைத்து விட்டார்கள்.2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
லேடியா மோடியா என கேட்ட தலைவியின் கட்சியில் தலைவியை மறந்து விட்டு தற்போது யார் தலைவர் என போட்டி போட்டுக்கொண்டு உள்ளார்கள், யார் தலைவராக வந்தாலும் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்க வேண்டும். அதிமுக அடமான திமுகவாக உள்ளது, அண்ணா திமுகவாக இல்லை.
இதையும் படிங்க: சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலையுடன் மணி மண்டபம் அமைக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
எம்ஜிஆர் ஜெயலலிதா காட்டிய கொள்கை உறுதியை இப்போதுள்ள நிர்வாகிகளும் காட்ட வேண்டும். கவலையோடு சொல்கிறேன். நல்ல இயக்கமான அதிமுக கொள்கையை முன்னிருத்தாமல் தங்களை முன்னிறுத்திக் கொண்டதால் தற்போது இந்த நிலைக்கு வந்து விட்டது.தங்கள் வருமானத்தை பார்க்காமல் அடமானம் வைக்கப்பட்ட கட்சியை மீட்கும் வழியை பார்க்க வேண்டும்" என தெரிவித்தார்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.