மதுரையில், டி.என்.எஸ்.ஆர்.எல்.எம். (TNSRLM) எனும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (Tamil Nadu State Rural Livelihood Mission Madurai) காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில், மதுரை டி.என்.எஸ்.ஆர்.எல்.எம். பிரிவில் பிளாக் ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணி நிரப்பப்பட உள்ளது. இது குறித்த விவரங்கள் வெளியாகிஹயுள்ளன.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள பிளாக் (வட்டார) ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். அதன்படி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு ஒருவர், செல்லம்பட்டிக்கு இருவர், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டிக்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் கணினி அறிவுக்கான 3 மாத எம்.எஸ்.ஆபிஸ் சான்று பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் கணினி அறிவியில் அல்லது பிற கணினி சார்ந்த படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த பணிகளானது எழுத்து தேர்வு முறையில் தேர்வு செய்யப்பட உள்ளன. இது தற்காலிக பணியாகும். எனவே, அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதற்கான தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் இணைத்து, இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, புது நத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில், மதுரை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?
பணிக்கான விண்ணப்பம் மற்றும் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2022/12/2022121598.pdf என்ற இந்த இணையதள முகவரியில் பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Government jobs, Local News, Madurai