மதுரை காமராஜ் பல்கலைகழகத்தில் Project Associate - I எனும் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு மாத சம்பளம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.31 ஆயிரம் வரை வழங்கப்படும்.
அதன்படி, நெட் (NET),கேட் (GATE) தகுதி பெற்றவர்களுக்கு ரூ.31 ஆயிரத்துடன் HRA வழங்கப்படும். நெட், கேட் தேர்வு தகுதி பெறாதவர்களுக்கு ரூ.25 ஆயிரத்துடன் HRA வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் மாஸ்டர் டிகிரியை முடித்திருக்க வேண்டும். அதன்படி Bioinformatics/computational Biology/Genomics/Biotechnology பிரிவுகளில் எம்.எஸ்சி, எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளை 55 சதவீத மதிப்பெண்களுடன் மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழங்களில் படித்து முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு என்பது கிடையாது. விண்ணப்பம் செய்பவர்கள் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுவர்கள் 2 ஆண்டுகள் வரை பணி செய்ய முடியும்.
Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 9ம் தேதிக்குள்(இன்றே கடைசி நாள்) ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி பயோடேட்டா, போட்டோ, Attested சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை Dr.Rajendharan, Department of Genetics, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதோடு சாப்ட் காப்பிகளை rajendhran.biologica@mkuniversity.org எனும் இமெயிலுக்கு இன்று தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy, Local News, Madurai