Home /News /madurai /

ஆட்டோவில் தவறவிடப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை ஒப்படைத்த ஓட்டுநர்.. குவியும் பாராட்டு

ஆட்டோவில் தவறவிடப்பட்ட ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை ஒப்படைத்த ஓட்டுநர்.. குவியும் பாராட்டு

ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்த காவல் ஆணையர் செந்தில்குமார்

ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்த காவல் ஆணையர் செந்தில்குமார்

Madurai | மதுரையில் ஆட்டோவில் தவறவிடப்பட்ட 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல் ஆணையர் செந்தில்குமார் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
பழனியை சேர்ந்த 4 பெண்கள் நேற்று மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்திறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் திலகர் திடல்  காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமண மண்டபத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் இறங்கி சென்ற சிறிது நேரத்திற்கு பின்னர், ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில்  9 லட்சம் ரூபாய் மதிப்பிலான 20 சவரன் நகை இருப்பதை கண்டார்.

அது பழனியை சேர்ந்த பெண்களின் நகையாக இருக்கக்கூடும் என உணர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜ், அவர்களிடம் நகையை ஒப்படைப்பதற்காக திருமண மண்டபம் சென்ற போது அவர்கள் அங்கு இல்லை. உடனே திலகர் திடல் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தார்.

Also see...தாம்பரம் அருகே பாரில் வெடிகுண்டு வீசிய நபர்

இதனை அறிந்த மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில்குமார் ஆட்டோ ஓட்டுநர் சுந்தர்ராஜை நேரில் அழைத்து அவரின் நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நகையை தவறவிட்ட பெண்கள் திலகர் திடல் காவல்நிலையம் வந்து நகையை பெற்றுச் சென்றனர். ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையான செயலை வியந்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Jewels, Madurai

அடுத்த செய்தி