முகப்பு /செய்தி /மதுரை / கடத்தல் கும்பலுக்கு குழந்தையை விற்ற விவகாரம்.. பெண்ணின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..

கடத்தல் கும்பலுக்கு குழந்தையை விற்ற விவகாரம்.. பெண்ணின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..

ஐகோர்ட் மதுரை கிளை

ஐகோர்ட் மதுரை கிளை

High Court Madurai Bench : திருச்சியில் கடத்தல் கும்பலுக்கு குழந்தையை விற்ற வழக்கில் பெண்ணின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த  திருமணமான இளம்பெண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார். இதுகுறித்து தனக்கு தெரிந்த வழக்கறிஞர் பிரபு என்பவரிடம் கூறியுள்ளார். குழந்தை பிறந்த பின்னர் பார்த்து கொள்ளலாம் என அவர் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  அந்த பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில்  பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து பிரபுவும் அவரது மனைவி சண்முகவள்ளியும் குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தனர். அந்தப்பெண்ணிடம் குழந்தையை 1 லட்ச ரூபாய்க்கு விற்றதாக கூறி தாங்கள் 20 ஆயிரம் பணத்தையும் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். பின்னர், குழந்தையை 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ததை அறிந்த அந்தப்பெண் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப்பெண்ணின் விருப்பத்தின்பேரில் குழந்தை விற்கப்பட்டதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து குழந்தையை விற்ற புகாரில், பிரபு அவரது மனைவி சண்முகவள்ளி, ஆகாஷ், புரோக்கர் கவிதா ஆகியோரை கைது செய்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் டெல்லியில் உள்ள குழந்தை கடத்தல் கும்பல் தலைவன் கோபிநாத் மூலமாக கந்ராடகா மாநிலத்தை சேர்ந்த பாக்கியஸ்ரீ என்பவருக்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்ககோரி சிறையில் உள்ள சண்முகவள்ளி,  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர் தரப்புக்கு வாதாடிய அரசு வழக்கறிஞர், “இவர்களுக்கு  குழந்தை கடத்தி விற்பனை செய்யும் கும்பலோடு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரனை செய்ய வேண்டும். இந்த  வழக்கு விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. எனவே தற்போது  இவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நீதிபதி சண்முகவள்ளியின்  ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

First published:

Tags: Crime News, Local News, Madurai