ஹோம் /நியூஸ் /மதுரை /

பொங்கல் பரிசாக ரூ. 5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல்வர் வழங்கணும் - கோரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ!

பொங்கல் பரிசாக ரூ. 5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல்வர் வழங்கணும் - கோரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ!

மாதிரி படம்

மாதிரி படம்

Madurai News : ஆதார் கார்டுடன் இணைத்தவர்களுக்குதான் பொங்கல் தொகுப்பு என்று கூறி விடாமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்.

  • Local18
  • 3 minute read
  • Last Updated :
  • Madurai, India

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், “திமுக ஆட்சியில் கூட்டுறவு துறையை செம்மை படுத்த வேண்டும். அதிமுக ஆட்சி போன்று இல்லை. ரேஷன் கடைகளில் கைரேகை திட்டம் என்பது மூத்த குடிமக்களின் கைரேகை சரியாக விழுவதில்லை. இந்த கை ரேகை திட்டத்தை தவிர்க்க வேண்டும்.

திமுக கொடுத்த வாக்குறுதியை எதையும் நிறைவேற்றவில்லை. உலகத்தில் உள்ள அனைவரும் சாதி மத பாகுபாடு இன்றி கொண்டாட கூடிய திருவிழா பொங்கல் திருவிழா.

அதிமுக ஆட்சியில் இரண்டு கோடியே 40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் கொடுத்துள்ளோம்.

இதையும் படிங்க : 'சம்பளம்.. சாம்பார்.. கம்பி கட்டும் கதையெல்லாம் வேண்டாம்'' - அண்ணாமலைக்கு கேள்விகளை அடுக்கிய செந்தில்பாலாஜி!

அன்றைக்கு இருந்த எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது பொங்கல் தொகுப்பு கொடுக்கவில்லை.

இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பரிசு கொடுப்பதாக கூறியிருக்கிறார். அதற்காக அமைச்சரவை கூட்டம் கூட்ட உள்ளார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர் ரூ.5000 வழங்குவார் என்று நம்புகிறோம்.

ஆதார் கார்டுடன் இணைத்தவர்களுக்கு தான் பொங்கல் தொகுப்பு என்று கூறி விடாமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை தொகை என்பது ஏழைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். பொங்கல் கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

இந்த வாக்குறுதியாவது நிறைவேற்றி கொடுங்கள். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில்  5000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.

ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சும்மா அறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது. வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடத்தலில் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் போதை பொருள் நடவடிக்கைகளும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. விற்பனையாளர்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர்.

திமுக ஆட்சியில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் 5 கிலோ 10 கிலோ எல்லாம் ஜூஜூபி. முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தற்போது கூட ராமேஸ்வரத்தில் இருந்து போதை பொருள் கடத்தல் 160 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது.

தொடர்ந்து இதுபோன்று நடப்பதற்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய நபர்களை கைது செய்ய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்” என்றார்.

இன்பநிதிக்கு கொடி பிடிப்போம் :

மேலும், இன்பநிதிக்கு கொடி பிடிப்போம் என மூத்த அமைச்சர் கே.என்.நேரு கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “உண்மையிலேயே நகர்புறத்துறை அமைச்சர் கூறியது உண்மைதான். திமுக அமைச்சர்கள் அனைவரும் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். கலைஞர் குடும்பத்தில் யார் அமைச்சராக இருந்தாலும் அவர் குடும்பம் தான் ஆட்சி.

இதையும் படிங்க : “சீமான், திருமாவ உள்ள வைக்கணும்.. காவல்துறையை கலைக்கணும்” ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

 நாம் மன்னர் பரம்பரையை தான் ஒழித்து இருக்கிறோமே தவிர கலைஞருடைய பரம்பரையை இதுவரை ஒழிக்கவில்லை. எல்லாரும் மனதில் என்ன நினைப்பார்கள் என்றால் கலைஞர் குடும்பத்தில் இனி குழந்தை பிறக்கவோ, வாரிசு வரக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அமைச்சர் கே.என்.நேரு எப்போதும் உண்மை பேசக் கூடியவர் எனவே இன்பநிதிக்கு குழந்தை பிறந்தால் கூட அவர்களுக்கும் திமுக கொடி பிடிப்பதற்கு ஆள் இருப்பார்கள். இனிமேல் தலைவர் அது குடும்பத்தில் வாரிசு வரக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அப்போதுதான் அனைவரும் தலைவராக முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வியூகம் :

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வியூகம் குறித்த கேள்விக்கு பதிலளித்த  அவர், “முனைப்பாக கட்சி தொண்டர்கள் எங்களை விட ஆர்வமாக உள்ளார்கள். நிறைய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவளிக்கின்றனர். திமுகவின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சியையும் அதிமுக ஆட்சியும் ஒப்பிட்டு அதிமுகவிற்கு ஆதரவளிக்கின்றனர்.

எனவே., திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வன்கொடுமை என பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் என்ற நிலை உள்ளது. செயலற்ற அரசாங்கம் ஆகவும் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காத நிலையும் உள்ளது.

எங்கள் தலைமையிலான கூட்டணி எந்த கூட்டணி அமைந்தாலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்” என்றார்.

செய்தியாளர் : சிவகுமார் தங்கையா - மதுரை 

First published:

Tags: ADMK, DMK, KN Nerhu, Local News, Madurai, Sellur K. Raju