கோடை காலத்தில் கார் மற்றும் பைக்குகளில் பெட்ரோல் நிரப்பும் வழிமுறைகள் குறித்து மதுரையை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சொல்லும் உபயோகமான தகவல்கள்.
பனிக்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. இனி வரும் நாட்கள் எல்லாம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. நாம் எல்லோரும் பொதுவாக வண்டியில் இருக்கும் பெட்ரோல் டேங்க்கை நிரப்பி வைத்திருந்தால் நாம் வெளியே சென்று வர ஏதுவாகவும் அடிக்கடி பெட்ரோல் போட வேண்டிய அவசியம் இருக்காது என்று பெட்ரோல் டேங்க்கை நிரப்பி வைத்திருப்போம். சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், “கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது வண்டியின் பெட்ரோல் டேங்க்கை முழுவதும் நிரப்பாதீர்கள், அப்படி நிரப்பும்போது பெட்ரோல் டேங்க் வெடிக்க வாய்ப்பு உள்ளது. பெட்ரோல் டேங்கில் காற்று உள்ளே வருவதற்கு இடம் கொடுக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பெட்ரோல் டேங்கை திறந்து மூட வேண்டும். இதனால் பெட்ரோல் டேங்கில் உருவாகும் வாயு வெளியேற முடியும்” என அந்த சமூக வலைதள செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : மதுரை மக்களே உஷார்.. நாளை மதுரை டூ திருமங்கலம் அகல பாதையில் ரயில் சோதனை ஓட்டம்!
இந்நிலையில், இந்த செய்தி உண்மையா? இல்லையா? என்று மதுரையை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேட்டபோது, “ஆம் உண்மை தான். கார் மற்றும் பைக் எதுவாக இருந்தாலும் வண்டியின் பெட்ரோல் டேங்க்கை முழுவதும் நிரப்பாதீர்கள். அப்படி நிரப்பினால் கண்டிப்பாக வெயிலின் தாக்கத்தினால் பெட்ரோல் டேங்கில் வாயு உருவாகும். அதனால் வெப்பநிலை அதிகரிக்கும்போது பெட்ரோல் டேங்க் வெடிக்க நேரிடும். எனவே காற்று புகும் அளவிற்கு பெட்ரோல் டேங்க்கை நிரப்பினால் மட்டும் போதுமானது” என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Local News, Madurai, Petrol-diesel