Home /News /madurai /

இன்ஸ்டாகிராம் காதல்... இளைஞரிடம் நகையை கொடுத்து ஏமாந்த சிறுமி!

இன்ஸ்டாகிராம் காதல்... இளைஞரிடம் நகையை கொடுத்து ஏமாந்த சிறுமி!

இன்ஸ்டாகிராம் காதல்

இன்ஸ்டாகிராம் காதல்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி வந்த வாலிபர் 60 பவுன் தங்க நகைகளை கைப்பற்றிச் சென்ற சம்பவம் வில்லாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை ஏமாற்றி நகையை களவாடிச் சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    மதுரை சேர்ந்த தம்பதியினரின் 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வயது 22  என்பவருடன் பழகி வந்துள்ளார்‌.

    இந்த நிலையில் இருவரும் நேரில் சந்தித்து காதல் ஜோடிகள் போல் சுற்றி வந்த நிலையில் இதனை பயன்படுத்தி சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடமிருந்து தங்க நகையை வாங்கி விற்று உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது. இது குறித்து  மகளிடம் விசாரணை மேற்கொண்டதில் சதீஷ்குமார் என்பவரிடம் நகையை கொடுத்ததாக ஒப்புக் கொண்டார்.

    ALSO READ |  திமுகவுடன் தொடர்பில்லை என ஓபிஎஸ் நிருபித்தால் கட்சியில் சேர்ப்பது பற்றி தலைமை முடிவெடுக்கும் - ராஜன் செல்லப்பா
     இது குறித்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் என்பவர் தனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் தங்க நகைகளை மிரட்டி வாங்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி வந்த வாலிபர் 60 பவுன் தங்க நகைகளை கைப்பற்றிச் சென்ற சம்பவம் வில்லாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

     

    செய்தியாளர் : சிவகுமார் தங்கையா
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Instagram, Love, Madurai

    அடுத்த செய்தி