Home /News /madurai /

இன்ஸ்டா காதல்.. 15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மோசடி இளைஞர் உட்பட 4பேர் கைது

இன்ஸ்டா காதல்.. 15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மோசடி இளைஞர் உட்பட 4பேர் கைது

மதுரை

மதுரை

Madurai: மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து ரூ.4 லட்சம்  மதிப்பிலான நகைகளை மோசடியாக அபகரித்த வழக்கில் இளைஞர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து ரூ.4 லட்சம்  மதிப்பிலான நகைகளை மோசடியாக அபகரித்த வழக்கில் இளைஞர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த சபீர் அகமது என்பவருடைய மகன் பயாஸ்கான் என்பவரது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிவந்துள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி அவ்வப்போது பாலியல் வன்புணர்விலும் ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், மோசடி வார்த்தைகளை கூறி சிறுமியிடம் இருந்து அடிக்கடி பணம் பெற்றும் ஏமாற்றி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் படிப்பு செலவிற்கு பணம் தேவை என சிறுமியை ஏமாற்றிய பயாஸ்கான் சிறுமியின் வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகையை தருமாறு வற்புறுத்தியுள்ளார்.அதனால் வீட்டிற்கு தெரியாமல் 10 பவுன் செயினை சிறுமி எடுத்து வந்து பயாஸ்கானிடம் கொடுத்த நிலையில், பயாஸ்கானின் நண்பர்களான புதூரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சரவணக்குமார் ஆகியோர்கள் உதவியோடு  சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி என்பவர் நகையை 2,70,000 ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளனர்.

Also Read: தங்கையின் கள்ளக்காதலனை கத்தியால் தலையில் வெட்டிய அண்ணன் கைது

இதில், பயாஸ்கான் ரூ.1, 70,000 ரூபாயும், அவனது நண்பர்கள் சதீஷ் 20,000 சரவணக்குமார் 30,000 ரூபாயும், சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி 50,000 ரூபாயையும் என பங்கிட்டு பிரித்துக்கொண்டுள்ளனர்.  இந்த விவகாரம் தெரிந்த சிறுமியின் தாயார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, பயாஸ்கான் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணக்குமார்,  சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி ஆகிய 4 பேரை கைது செய்து நகையை மீட்டு, பயாஸ்கான் மீது போக்சோ சட்டத்தின் கீழும் மற்றும் 3 பேர் மீது மோசடி வழக்கின் கீழும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Instagram, Love, Madurai, Pocso

அடுத்த செய்தி