முகப்பு /செய்தி /மதுரை / கள்ளழகர் காலடி பட்ட மண்.. 450 ஆண்டுகளாக மதுவுக்கும், புகைக்கும் தடை.. தமிழகத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?

கள்ளழகர் காலடி பட்ட மண்.. 450 ஆண்டுகளாக மதுவுக்கும், புகைக்கும் தடை.. தமிழகத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?

தேனூர் கிராமம்

தேனூர் கிராமம்

அரசே இங்கு மதுக்கடை திறக்க முயன்ற போதும் போராட்டம்  நடத்தி கடையை இந்த ஊரில் திறக்க விடவில்லையாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று சுவர்களில் எழுதுவதும், திரைப்படங்களின்  முன்னர் போடுவதையும் பார்த்திருப்போம். அப்படி எல்லா இடங்களில் போட்டும் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது. சிகரெட் விற்பனையை குறைக்க முடியவில்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளாக மதுரையில் உள்ள கிராமத்தில் மது மற்றும் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

எப்படி, எப்போது ஆரம்பித்தது என்று இன்று வரை மக்களுக்கு தெரியாத போதிலும் எந்த காரணமும் கேட்காமல் அப்படியே  பின்பற்றி வருகின்றனர், மதுரை சோழவந்தான் பகுதியில் அமைந்துள்ள தேனூர் கிராமத்து மக்கள். மதுரை மத்திய பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் சுமார் 450 ஆண்டுகளாக புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் இல்லையாம்.

மதுரை என்பது மீனாட்சிக்கு மட்டும் அல்லாமல் கள்ளழகருக்கும் பேமஸ். அப்படியான கள்ளழகர் காலடி பட்ட மண் என்பதால் அதை அசுத்தம் செய்யும் படி மது அருந்தக் கூடாது என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் இந்த ஊரில் சாராயம், பீடி, சுருட்டு என்பதை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே தடை செய்து விட்டனர். அரசே இங்கு மதுக்கடை திறக்க முயன்ற போதும் போராட்டம்  நடத்தி கடையை இந்த ஊரில் திறக்க விடவில்லையாம்.

இந்த ஊரில் பிறந்தவர்களுக்கு மட்டும் அல்லாமல், இந்த ஊருக்கு புதிதாக வரும் மக்களுக்கும் இதை அறிவுறுத்துகின்றனர். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்த பழக்கம் வந்துவிடக்கூடாது என்று சொல்லி வளர்க்கின்றனர். இங்குள்ள எந்த கடைகளிலும் ப்ளாக்கில் கூட மது , சிகரெட் விற்கப்படுவதில்லையாம். எல்லைக்கு வெளியே தான் எல்லாம் நடக்குமாம்.

அதே போல இந்த ஊரில் உள்ள மக்கள் திருமணம் , திருவிழா போன்ற நிகழ்வுகளில் கூட குதிரை  மீது அமர்ந்து பயணிப்பதில்லை. கள்ளழகரின் வாகனம் குதிரை என்பதால் அதற்கு மரியாதையை கொடுப்பதாகவும்  தெய்வ  உடையதாக நினைப்பதால் அதையும் சாதாரண மனிதர்கள் பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர்.

மதுரையில் தேனூர் மட்டும் இல்லாமல் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்திலும் மது,  சாராயம்,சிகரெட், சுருட்டு , பான்பராக் போன்ற எந்த போதை தரும் பொருட்களையும் அனுமதிப்பதில்லை.

First published:

Tags: Alcohol, Ban, Local News, Madurai