தமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO) , உடனடியாக நாள் தோறும், ஆய்வு மேற்கொண்டு இரு சக்கர, 4 சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில், விதிமுறைகளை மீறி தெய்வங்கள், அரசியல் கட்சி சின்னங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட படங்களை நம்பர் பிளேட்டில் பதிவிட்டு இருந்தால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்து, கடும் அபராதம் விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இரு சக்கர வாகன உரிமையாளர்கள் , கடந்த 07.08.2021 ல் மத்திய அரசு திருத்தி அமைக்கப்பட்ட இந்திய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அரசு வழங்கியுள்ள வாகன எண்களை அதன் தகட்டில் பதிவிடுவதில்லை.
விதிமுறைகளை பின்பற்றவில்லை. மாறாக, நம்பர் பிளேட்டில், அவரவர்களின் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப தங்களின் அபிமான அரசியல் தலைவர்களின் புகைப்படங்களையோ , அரசியல் கட்சிகளின் சின்னங்களையோ , தங்களது விருப்பமான தெய்வங்களின் புகைப்படங்களையோ அல்லது தாங்கள் விரும்புகின்ற திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களையோ மிகவும் பெரிதாக பதிவிட்டுக்கொள்கின்றனர் .
வாகனத்தின் பதிவெண்களை மட்டும் மிகவும் ஆனால் சிறியதாக பதிவிட்டுக் கொள்கின்றனர் . இது முற்றிலும் தவறான செயலாகும் ,
கூடவே மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திட்டங்களுக்கு எதிரான பெரும்குற்றச் செயலாகவே இது பார்க்கப்படுகின்றது. கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்ட மீறல்களான செயல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வாகனங்களில், வாகனத்தின் பதிவு எண்ணுக்குப் பதிலாக, நம்பர் பிளேட்டில் அரசியல் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இது மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி 50 & 51க்கு எதிரானது. விதிகளை மீறினால் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். எனவே, வாகனங்களில் நம்பர் பிளேட் விதிகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் உண்மையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, வாகனங்களில் நம்பர் பிளேட்டில் விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார். இந்த பொதுநல மனு நீதிபதிகள், R.மகாதேவன், J.சத்திய நாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தற்போது இது ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இதில் அரசியல் சார்பு இல்லாமல், நடுநிலையுடன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Also see... ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு மனைவியை கொன்ற கணவர்.. விபத்துபோல் நாடகமாடியது அம்பலம்.!
தமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) , உடனடியாக நாள் தோறும், ஆய்வு மேற்கொண்டு இரு சக்கர, 4 சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில், விதிமுறைகளை மீறி வேறு ஏதாவது தெய்வங்கள், அரசியல் கட்சி சின்னங்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட படங்களை நம்பர் பிளேட்டில் பதிவிட்டு இருந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து கடும் அபராதம் விதிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரர் சந்திரசேகர் மாவட்ட நிர்வாகத்தின் மனு கொடுக்கும் போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை சட்ட விரோத நம்பர் போர்டுகளை அகற்ற வில்லை எனில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் மனு அளித்துள்ளார் என்பதை சுட்டி காட்டினார்.
இதனை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர். ஒரு கோரிக்கை வைக்கும்போது இது போன்று மிரட்டும் தொனியில் மனுவின் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது; மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம் என கண்டனத்தை தெரிவித்தனர். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அந்த வரியை நீக்கிவிடலாம் என தெரிவித்தார் . அதற்கு நீதிபதிகள் இதை எளிதாக கடந்து போக முடியாது என தெரிவித்து மனுதாரருக்கு இதுபோன்று மனு தாக்கல் செய்யக்கூடாது என எச்சரித்தனர். மனுதாரர் பின்பற்றுவதாக கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai