ஹோம் /நியூஸ் /மதுரை /

நான் யாருக்கும் அடிமை இல்லை - அமைச்சர் பிடிஆர்

நான் யாருக்கும் அடிமை இல்லை - அமைச்சர் பிடிஆர்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சையும் மீறி, கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  தான் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டேன் என்றும், தனது வழி தனி வழி எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி, மதுரையில் அக்கட்சியினருக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அதேவேளையில், மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் மதுரையை சேர்ந்த மற்ற அமைச்சர்களோ, திமுக எம்எல்ஏ-க்களோ பங்கேற்கவில்லை.

  Also Read : தமிழக பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதனுக்கு சுற்றுச்சூழல் போராளி விருது

  இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சையும் மீறி, கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிப்பதாக கூறினார். மேலும், தலைவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்ததுடன், வேறு யாரும் பங்கேற்க கூடாது என மிரட்டல் விடுத்தது ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

  ' isDesktop="true" id="818583" youtubeid="mavL68BfGkk" category="madurai">

  அத்துடன், கட்சியினர் யாரும் சிறிய மனிதராக நடந்து கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார். தன்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் சிலர் உள்ளதாகவும், அவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி ஏற்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: DMK, Minister Palanivel Thiagarajan