ஹோம் /நியூஸ் /மதுரை /

மீன்பிடிப்பதில் தகராறு... கணவன், மனைவி சரமாரி வெட்டி படுகொலை... மதுரை அருகே பரபரப்பு

மீன்பிடிப்பதில் தகராறு... கணவன், மனைவி சரமாரி வெட்டி படுகொலை... மதுரை அருகே பரபரப்பு

வெட்டி படுகொலை செய்யப்பட்ட தம்பதி

வெட்டி படுகொலை செய்யப்பட்ட தம்பதி

Madurai Murder | பானைபரி மூலம் மீன்பிடித்த கருப்பசாமிக்கும், அதே ஊரை சேர்ந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டு பிரச்சனையானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மேலூர் அருகே மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இரவில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஆண்டிகோயில்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி(40), கால்நடை மேய்க்கும் கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி மற்றும் குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக இங்குள்ள இளமுனி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த மறுகால் தண்ணீரில் பானை வைத்து கெண்டை மீன்களை இப்பகுதியில் பிடித்து உண்பது வழக்கம். இதனை "பானைபரி" என அழைக்கின்றனர்.

இதையும் படிங்க : செய்தியாளர்களை ஒருமையில் பேசிய அண்ணாமலை... சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

பானைபரி மூலம் மீன்பிடித்த கருப்பசாமிக்கும், அதே ஊரை சேர்ந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரைக்கும் தகராறு ஏற்பட்டு பிரச்சனையானது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரையும்  சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்து இருவர் தப்பினர்.

கொலை செய்தது மழுவேந்தி மற்றும் ராஜதுரை தான் என உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்தினர் கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த கீழவளவு போலீசார் இருவரது சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர்.

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக ராஜதுரை என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published by:Karthi K
First published:

Tags: Crime News, Madurai, Murder