Home /News /madurai /

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏராளமான காலிப்பணியிடங்கள்.. சம்பளம் ரூ.58,600 -உடனே இதை பண்ணுங்க.!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏராளமான காலிப்பணியிடங்கள்.. சம்பளம் ரூ.58,600 -உடனே இதை பண்ணுங்க.!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

Madurai Meenatchi Amman Temple | மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 18 காலிப்பணியிடங்கள் என்றும் இந்து சமய நிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வேலை வாய்ப்பு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இதன் மூலம் கீழ் கண்ட பணியிடங்களுக்கு நிரப்பதற்கு  தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகிறது. 18 காலிப்பணியிடங்கள் என்றும் இந்து சமய நிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப சம்பளம் பட்டியில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாளம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் தாளத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

வேதபாராயணம்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட ஆகமப்பள்ளியில் வேதபாராயணத்தில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உபகோயில் ஒதுவார்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வேதபாடசாலையில் ஓதுவார் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600 – 39,900

உதவி பரிசாரகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வேதபாடசாலையில் ஓதுவார் துறையில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

உதவி யானைப் பாகன்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானைக்கு பயிற்சி அளிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

கருணை இல்லக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

கால்நடை பராமரிப்பு தொழிலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

தொழில்நுட்ப உதவியாளர் (சிவில்)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : கட்டட பொறியியலில் பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

ஜெனரேட்டர் ஆபரேட்டர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

பிளம்பர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000 – 56,900

சமையல்காரர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,200 – 41,800

உதவி சமையல்காரர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

துப்புரவு தொழிலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் வாசிக்க: மதுரையில் 24 மணி நேரமும் இயங்கும் ரோஸ் மில்க் கடை - நள்ளிரவிலும் தேடிச் செல்லும் வாடிக்கையாளர்கள்..

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மீனாட்சி அம்மன் கோயில் அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பத்தினை ரூ. 100 செலுத்தி பெற்றுக் கொள்ளவும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.10.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Employment, Hindu Temple, Madurai

அடுத்த செய்தி