ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரையில் நள்ளிரவு கொட்டித் தீர்த்த கனமழை.. மிதக்கும் கலெக்டர் ஆபீஸ் - கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்

மதுரையில் நள்ளிரவு கொட்டித் தீர்த்த கனமழை.. மிதக்கும் கலெக்டர் ஆபீஸ் - கண்டுகொள்ளுமா மாநகராட்சி நிர்வாகம்

கனமழை

கனமழை

Madurai | மதுரையில் நேற்று இரவு தொடர்ந்து 3 ம்ணி நேரம் பெய்த கனமழையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Madurai, India

  மதுரையில் நேற்று நள்ளிரவு நகரின் மையப் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தெற்குவாசல், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணாநகர், தமுக்கம், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

  தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பானடி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் பள்ளிக்கு செல்வோர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர், மாநகராட்சி ஊழியர்கள் தாமதமாக வந்து மழை நீரை அகற்றினர்.

  குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் குளம் போல் காட்சியளிக்கின்றது. ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மழை நீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால், குறைதீர் கூட்டடத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

  Also see... மைலாப்பூரில் சுண்டைக்காய் விலை கேட்டால் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது..!- ப.சிதம்பரம் விமர்சனம்

  மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்றும் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

  செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Heavy Rainfall, Madurai