மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க துப்பாக்கி இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அது குறித்து கரிமேடு காவல் நிலையத்திற்கும், சிறை நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்ததின்அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த கையடக்க ஏர்கன் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதடைந்து இருப்பதால் யாரேனும் குப்பைத் தொட்டியில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.
Must Read : அரக்கோணம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
இந்த துப்பாக்கியை யார் குப்பை தொட்டியில் போட்டது, எதற்காக இங்கே போடப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய சிறைக்கு அருகே குப்பை தொட்டியில் துப்பாக்கி கிடந்தது அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gun, Madurai, Madurai Central Jail