திராவிடம், ஆரியம் என்பது நிலம் சார்ந்த இனப்பிரிவு தான் என தமிழக ஆளுநர் ரவி மீண்டும் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகியிருப்பதாகவும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நெறிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி உயிர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் ஆயிரத்து 48 பேருக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை ஆளுநர் வழங்கி கெளரவித்தார்.
விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம், ஆரியம் என்பது நிலம் சார்ந்த இனப்பிரிவு தான் என்று மீண்டும் தெரிவித்தார். வரலாற்றை உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், மேற்கில் இருப்பவர்களை ஆரியர்கள் என்றும், தெற்கில் இருப்பர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தியதாக கூறினார். பின்னர் இந்தியாவை மண்டலங்களாக பிரித்து மதம், பொருளாதாரம் காரணமாக ஆங்கிலேயர்கள் பிரித்து ஆண்டதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: பழைய பழனிசாமி... வெற்று வசனங்கள் எதற்கு? தைரியம் உண்டா? - இபிஎஸ் மீது ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்..
ஏற்கனவே, திராவிடம் என்பது ஆங்கிலேயேர்கள் அறிமுகம் செய்த சொல்லாடல் என ஆளுநர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தான், மீண்டும் திராவிடம் தொடர்பாக ஆளுநர் பேசியுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியை ஊக்குவிப்பதாக கூறினார். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆருத்ரா மோசடி நிறுவனமல்ல.. எங்கள் வாழ்வை செழுமையாக்க வந்த நிறுவனம்... பணம் கட்டியவர்கள் திடீர் பல்டி.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக நுழைவுவாயில் அருகே சமூகநீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்ற போது இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்திலேற்றி சென்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.