Home /News /madurai /

மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரித்த விநாயகர் சிலைகள்..

மதுரை மத்திய சிறை கைதிகள் தயாரித்த விநாயகர் சிலைகள்..

மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் விநாயகர் சிலைகள்.

மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் விநாயகர் சிலைகள்.

Madurai | சிலைகள் அனைத்தும் சிறை வளாகத்தின் வெளியே குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மத்திய சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். இவர்களில் தண்டனை கைதிகளுக்கு மருத்துவ பேண்டேஜ், ஆபீஸ் கவர், உணவு பண்டங்கள் தயாரித்தல் உள்ளிட்ட கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

அதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கும் சிறை நிர்வாகம் வழிவகை செய்து கொடுத்து வருகிறது. இங்கு அடுத்தாண்டு கைதிகள் மேற்பார்வையில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.

தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளிலும் கைதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு அடி மற்றும் ஒன்றரை அடி உயரத்திலான களிமண் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.



Also see....மாமூல் வாங்குவதில் தகராறு... கஞ்சா போதையில் அரங்கேறிய கொடூர கொலை 

இந்த சிலைகள் அனைத்தும் சிறை வளாகத்தின் வெளியே குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன எனவும் சிறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Madurai Central Jail, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

அடுத்த செய்தி