மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சில ரயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
மதுரை அருகே வாடிப்பட்டியில் உள்ள டிராக்டர் தொழிற்சாலையிலிருந்து டிராக்டர்களை ஏற்றிக் கொண்டு வடமாநிலங்களுக்கு செல்வதற்காக தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை சரக்கு ரயில் மதுரை வந்தது. மதுரை ரயில் நிலையம் மூன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென சரக்கு ரயிலின் மைய பகுதியில் உள்ள 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஈடுபட்டனர். நள்ளிரவில் நடைபெற்ற விபத்து என்பதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கபட்டது. இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தினால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய சில ரயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.