உலக தமிழ் சங்கம், மதுரையின் சார்பில் 'இலக்கியம் இலக்கணம் அறிவோம் - கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பு' நிறைவு விழா நிகழ்வு உலக தமிழ் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உலக தமிழ் சங்க இயக்குநர் ப.அன்புச்செழியன் தலைமையுரையாற்றினார். அந்த உரையில் பேசிய அவர், ‘உலகத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியம் இலக்கணம் அறிவோம். கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் தொலைதூரத்திலிருந்து வந்து கலந்து கொண்டவர்கள் பலர்.
அரிது அரிது மானிடராதல் அரிது என்பார் ஔவையார். பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையிலும் இலக்கியம், இலக்கணம் பயிலவேண்டும் என்ற அவாவினால் பலரும் பங்கேற்றனர். தமிழ் இலக்கியம் பரந்துபட்டது.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்ற பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனையை ஒரு தீப்பொறியாக விதைத்துள்ளோம். இந்த நிகழ்வு உங்களுக்கு வழிகாட்டியாக வாழ்வின் முன்னோடியாக அமையும் என்று எண்ணுகிறேன்’ என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கவிஞர் மு.முருகேஷ் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, ‘தொடக்க காலத் தமிழ்ச் சமுதாயம் ஜாதி, பேதமற்ற பொதுவுடமைச் சமுதாயமாக இருந்தது. தமிழில்தான் இணையத்தில் அதிக படைப்புகள் உள்ளன.
ஏராளமான வேர்ச்சொற்களை அதிகம் உடையது தமிழ்மொழி. நம் குழந்தைகளின் கையில் தாய்மொழியைக் கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இளைய தலைமுறைகளுக்கு தமிழை விதைக்கவேண்டும் என்பதற்காக இலக்கியம், இலக்கணம் அறிவோம் என்ற கட்டணமில்லாப் பயிற்சி வகுப்பை முன்னெடுத்த உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்நிகழ்வினை உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வுவளமையர் ஜ.ஜான்சிராணி, ஆய்வறிஞர் முனைவர் சு.சோமசுந்தரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
செய்தியாளர் : யுவதிகா - மதுரை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai