ஹோம் /நியூஸ் /மதுரை /

மதுரையில் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

மதுரையில் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மதுரையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் SSC,CHSL போட்டி தேர்விற்காக தோராயமாக 4,500 காலி பணியிடங்கள் வெளியீடு செய்தது. இப்போட்டித் தேர்வு வருகின்ற பிப்ரவரி 2023 அல்லது மார்ச் 2023 அன்று நடைபெறும் என்று அறிவிக்கக்கப்பட்டு உள்ளது.

போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஆகச் சிறந்த வல்லுனர்களால் நடத்தப்படும் என்றும் மேல்நிலைப் படிப்பு, பிளஸ் டூ முடித்த 18 வயதிற்கு மேற்பட்ட போட்டி தேர்வாளர்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் சென்று விண்ணப்ப படிவங்களை கொடுத்து கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

அதன்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்விற்கு விண்ணப்பம் செய்திருந்த மாணவ, மாணவியருக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

செய்தியாளர்: யுவதிகா, மதுரை.

First published:

Tags: Local News, Madurai