Home /News /madurai /

தொடர் மழையால் மதுரையில் பூக்கள் விலை 4வது நாளாக உச்சம்..

தொடர் மழையால் மதுரையில் பூக்கள் விலை 4வது நாளாக உச்சம்..

பூ மார்கெட்

பூ மார்கெட்

Madurai | தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இன்று காலை முதல் வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. தொடர் மழையால் பூக்கள் அனைத்தும் உதிர்ந்து பல இடங்களில் செடிகளில் அழுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் பூக்களை பறிக்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர்.

அதே சமயத்தில் எப்போதும் இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகை பூ விநாயகர் சதுர்த்தியை (ஆக.30) முன்னிட்டு  1,600 முதல் 1,800 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையானது.

அதனை தொடர்ந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, 4 நாட்களாக விலை உயர்வு நீடித்து வருகிறது.

மல்லிகை பூ 1,500 முதல் 1,800 ரூபாய் வரையும், 50 - 60 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்று 150 ரூபாய்க்கும், 250 - 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் இன்று 600 - 700 ரூபாய்க்கும்,  50 ரூபாய்க்கு விற்கப்படும் பட்டன் ரோஸ் இன்று 150 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரளி இன்று 150-200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also see...பைக் திருடி பிரித்து விற்பனை... சிசிடிவியால் சிக்கிய திருடன்..







































எண்பூஇயல்பான விலைஇன்றைய விலை (கிலோவுக்கு)
1. மல்லி ரூ.300 - 600 ரூ.1500-1800
2. சம்மங்கி 50 150
3. பிச்சி, முல்லை 300 700
4. ப.ரோஸ் 50 150
5. அரளி 30  200

 
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Today market rate

அடுத்த செய்தி