ஹோம் /நியூஸ் /Madurai /

மதுரை மேலவாசல் கோவில் திருவிழாவில் தீ விபத்து...

மதுரை மேலவாசல் கோவில் திருவிழாவில் தீ விபத்து...

கோவில் திருவிழாவின் போது தீ விபத்து

கோவில் திருவிழாவின் போது தீ விபத்து

Madurai : மதுரை மேலவாசல் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மதுரை திடீர்நகர் அருகே உள்ள மேலவாசல் பகுதியில் 500க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்குட்பட்ட இடத்தில் சந்தனமாரியம்மன் என்னும் கோவிலில் வருடந்தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை கோலாகலமாக காப்பு கட்டி கோயில் திருவிழா தொடங்கிய நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் பக்தர்கள் அனைவரும் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், பூப்பல்லாக்கு நிகழ்ச்சிக்கு முன்னதாக சில இளைஞர்கள் சரவெடி பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக திருவிழா பந்தலுக்குள் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ மள மள வென பரவியது.

அந்தத் தீ பந்தல் முழுவதும் வேகமாகப் பரவியது. இதைப் பார்த்த பொதுமக்கள், அங்கிருந்து அலறியடித்து ஓடினர். இந்நிலையில், அங்கிருந்த, இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. மற்றும் அங்கிருந்த சில பொருட்கள் தீயில் எரிந்தன.

Must Read : நயன்தாராவுக்கு தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்! பிரபலங்கள் வாழ்த்து மழை...

இந்நிலையில், தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் அங்கே விரைந்து வந்தனர். பின்னர், 20 நிமிடத்திற்குள் அவர்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Fire accident, Madurai, Temple