Home /News /madurai /

மதுரையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து.. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்!

மதுரையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து.. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்!

மதுரையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து.

மதுரையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து.

Madurai | மதுரையில் பிரபல ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்தோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகே  தனியார் உணவு மற்றும் தங்கும் விடுதி உள்ளது. விடுதியின் கீழ்தளத்தில் உள்ள ஏசி ஹாலில் அதிகாலை 3.30 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தீ விபத்து ஏற்பட்டு முதல் தளம் வரை பரவியது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசுக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதனை அடுத்து அங்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 4 மாடி கொண்ட  கட்டிடத்தில் 20 தங்கும் அறைகளில்  தங்கியிருந்தவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் மூச்சு திணறல் ஏற்பட்ட 7 நபர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Also see... 37,000 உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய இரு விமானிகள்..

இந்த தீ விபத்தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினரின்  துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Fire, Hotel, Madurai

அடுத்த செய்தி