Home /News /madurai /

ஆர்.பி.உதயகுமார் செய்துள்ள ஊழல் குறித்து பேச ஆரம்பித்தால் நேரம் பத்தாது : நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

ஆர்.பி.உதயகுமார் செய்துள்ள ஊழல் குறித்து பேச ஆரம்பித்தால் நேரம் பத்தாது : நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

Madurai | முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்துள்ள ஊழல் குறித்து பேச ஆரம்பித்தால் நேரம் பத்தாது என்ரு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க மதுரை வட்டார மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மனித வள மற்றும் நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்கள் வருவது முக்கியம் என்பது போல உண்மையில் வேலை வாய்ப்பை  அதிகம் உருவாக்குவது சிறு குறு தொழில் நிறுவனங்கள்தான்.

சிறு குறு நிறுவனங்கள் மிகவும் முக்கியமானது. ஏற்கனவே சிறந்த கல்வி மாநிலமாக உள்ள தமிழகத்தில் இந்த நிறுவனங்களை உருவாக்குவது தமிழக முதல்வரின் முக்கிய இலக்காகும். இந்த சிறு குறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை அரசாங்கமே பயன்படுத்தும் வகையில் அரசாங்கத்திற்கு விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக டெண்டர் விதிமுறைகள் மாற்றி உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஓராண்டில் தமிழ்நாட்டில் பல நூறு நிறுவனங்கள் உருவாக்குவதற்கு இந்த நிகழ்வு அடித்தளமாக இருக்கும். சென்னையில் மழை நீரை உடனடியாக வெளியேற்ற  சூப்பர் சக்கர் லாரி உள்ளது போல் மதுரையில் ஒரு லாரி வைக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு மேலும் கூடுதலாக சூப்பர் லாரி வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Also see... இபிஎஸ் தொடர்ந்த வழக்கு: அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ்  

அரசு குறித்து ஆர்.பி. உதயகுமார் பல்வேறு குற்றச்சாட்டு வைத்துள்ளது குறித்த கேள்விக்கு "ஆர்.பி.உதயாகுமருக்கு பதில் சொல்லும் ஆள் நான் இல்லை. ஆர்.பி.உதயகுமார் செய்துள்ள ஊழல் குறித்து பேச ஆரம்பித்தால் நேரம் போதாது. ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை ஆணையம் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Minister Palanivel Thiagarajan, RB Udayakumar

அடுத்த செய்தி