முகப்பு /செய்தி /மதுரை / 8 வயது மகளை கொன்று பக்கெட்டில் போட்டு விட்டு சென்ற தந்தை.. மதுரையில் பயங்கரம்..!

8 வயது மகளை கொன்று பக்கெட்டில் போட்டு விட்டு சென்ற தந்தை.. மதுரையில் பயங்கரம்..!

மகளை கொன்ற தந்தை

மகளை கொன்ற தந்தை

Madurai | 2 வாரமாக தலைமறைவாக இருந்த காளிமுத்துவை, போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai | Tamil Nadu

மதுரையில் மனைவி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனது 8 வயது மகளை கொன்று வாளியில் போட்டு வீட்டு பரணில் வைத்து விட்டு சென்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள சோலை அழகுபுரம்பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து, பிரியதர்ஷினி தம்பதி. இவர்களுக்கு எட்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. காளிமுத்து அதே பகுதியில் தையல் கடையில் டெயிலராக வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி பிரியதர்ஷினி கீழவாசல் பகுதியில் ஒரு பாத்திர கடையில் விற்பனை பிரிவில் வேலை செய்து வருகிறார்.

கடந்த செப்., 23 ஆம் தேதி இரவு இவர்களது வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசி வருவதாக அக்கம் பக்கத்தினர்  ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டு பரணில் 8 வயது சிறுமி,  கை, கால் கட்டப்பட்ட நிலையில் ஒரு வாளிக்குள் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து சிறுமியின் உடலை  பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க | பெற்ற மகளையே மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை - அதிர்ச்சி சம்பவம்

விசாரணையில் கடந்த சில வருடமாக காளிமுத்து அவரது மனைவி பிரியதர்ஷினியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, 2 வாரமாக தலைமறைவாக இருந்த காளிமுத்துவை, போலீசார் நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறை மகளிடம் சொல்லி புலம்பியதாகவும், அதற்கு மகள் நாம் சாகலாம் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மகளின் பேச்சை கேட்டு, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு சடலத்தை வாளியில் வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தார். பிறகு ரயிலில் விழுந்துசாகலாம் என புறப்பட்ட அவர், பயத்தில் சாக முடியாமல் சுற்றி திரிந்ததாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Crime News, Madurai, Murder