Home /News /madurai /

மதுரை மத்திய சிறையில் மகனுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தந்தை கைது...

மதுரை மத்திய சிறையில் மகனுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தந்தை கைது...

மதுரை மத்திய சிறை

மதுரை மத்திய சிறை

Madurai District : மதுரை மத்திய சிறையில் மகனுக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தந்தையும், அவருக்கு உடந்தையாக வந்த அவரது மகனின் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட தண்டனை பெற்ற கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில் பெண் கைதிகள் தனிசிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசியை பார்வையாளர் சந்திக்க சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து ஏனைய நாட்களில் காலை முதல் மதியம் வரை அனுமதிக்கப்படுவர். 

இந்நிலையில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் முகமது அலி நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 8 ம் தேதி முதல் மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்து வருகிறார்.

Also see... வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட திட்டம் - கடலூரில் மூவர் கைது

இவரை சந்திக்க மத்திய சிறைக்கு வந்த சிறைவாசியின் தந்தை இப்ராஹீம் மற்றும் நண்பன் ஜெயசூரிய பிரபா சிறையின் பிரதான வாயிலில் சிறைக்காவலர்கள் பரிசோதனை மேற்கொண்டபோது, ஜெயசூரிய பிரபா தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த சுமார் 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டு சிறைக்குள் தடை செய்யப்பட்ட  பொருளை கொண்டு வந்தாக இப்ராஹீம் மற்றும் ஜெயசூர்யா இருவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கரிமேடு காவல் நிலையத்தில் சிறைத்துறையினர் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி