முகப்பு /செய்தி /மதுரை / பள்ளி மாணவர்களுக்கு போதை உணர்வு தரும் மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை.. மதுரையில் மருந்தக உரிமையாளர் கைது

பள்ளி மாணவர்களுக்கு போதை உணர்வு தரும் மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை.. மதுரையில் மருந்தக உரிமையாளர் கைது

மதுரா மெடிக்கல்ஸ்

மதுரா மெடிக்கல்ஸ்

Madurai district News : மதுரையில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் போதை உணர்வளிக்கும் நரம்பியல் மாத்திரைகளை பள்ளிமாணவர்களுக்கு விற்பனை செய்த பிரபல மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை காமராஜர் சாலையில் இயங்கி வரும் பிரபல மருந்தகமான ‘மதுரா மெடிக்கல் சென்டர்‘ல் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை கடிதங்கள் இல்லாமலேயே  நரம்பியல் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், அந்த மாத்திரைகளை கொண்டு இளைஞர்கள் போதை உணர்வுக்கு அடிமையாவதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையில் போலீசார் மற்றும் மருந்து ஆய்வாளர் குழுவினர் கடையில் அதிரடி சோதனை நடத்தி கடையில் இருந்த குறிப்பிட்ட மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அத்துடன், கடை உரிமையாளர் தங்கராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தொடர்ந்து மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதித்த போலீசார் கடையை அடைக்க உத்தரவிட்டதன் பேரில் கடை அடைக்கப்பட்டுள்ளது.

Must Read : வயிற்றில் கத்திரிக்கோல் உடன் 12 ஆண்டுகள் அவதி: பெண்ணிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் மருந்தாளுனர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி கடைக்கு சீல் வைப்பது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Madurai, Medical shop, School students