முகப்பு /செய்தி /மதுரை / விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு வந்து சிக்கிய போலி விஜிலென்ஸ் அதிகாரி...

விஜிலென்ஸ் அலுவலகத்திற்கு வந்து சிக்கிய போலி விஜிலென்ஸ் அதிகாரி...

Madurai | மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கே வந்து பெண் ஆய்வாளரை ஏமாற்ற முயன்ற நபர் கைது.

Madurai | மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கே வந்து பெண் ஆய்வாளரை ஏமாற்ற முயன்ற நபர் கைது.

Madurai | மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி போல் நடித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கே வந்து பெண் ஆய்வாளரை ஏமாற்ற முயன்ற நபர் கைது.

  • Last Updated :
  • Madurai, India

மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் சூர்யகலாவின் அலைபேசி எண்ணுக்கு நேற்று (அக்.17) காலை முத்துக்கிருஷ்ணன் (46) என்பவர் தொடர்பு கொண்டு, சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும் அலுவல் ரீதியாக சூர்யகலாவை சந்திக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

பின், தல்லாகுளத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வந்து சூர்யகலாவை சந்தித்த முத்துக்கிருஷ்ணன், மதுரை டி.ஆர்.ஓ.  அலுவலகத்தில் ஒரு விசாரணைக்காக வந்ததாகவும், சிலை தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஒருவர் மூலம் சூர்யகலாவின் அலைபேசி எண்ணை பெற்று அவரை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

முத்துக்கிருஷ்ணனின் பணி விபரங்கள் குறித்த கேட்ட போது, அவரளித்த பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் சந்தேகமடைந்த சூர்யகலா அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருவதும், அங்குள்ள விமான நிலையத்தில் எக்ஸ் ரே ஸ்கிரீனர் (X-Ray Screener) வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

மதுரை பேரையூரை சொந்த ஊராக கொண்ட முத்துக்கிருஷ்ணன் அவரது உறவினர் ஒருவருக்கு வருவாய் சான்றிதழ் பெறுவதற்காக பேரையூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கு வி.ஏ.ஓ.வாக பணியாற்றி வரும் முத்துக்காளை என்பவரின் அறிமுகம் கிடைத்து, அவரிடம் தான் சென்னையில் விஜிலென்ஸ் ஆய்வாளராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பிய முத்துக்காளை, மின்சார இணைப்பு வழங்க போலி சான்றிதழ் வழங்கியதாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அந்த வழக்கில் தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

Also see... டிரைலர் லாரி ஏறியதில் இளம்பெண் பலி.. தந்தை கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்

top videos

    அதன்படி, முத்துக்காளையை தல்லாகுளம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்த முத்துக்கிருஷ்ணன் அவரை அலுவலகத்தின் வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு, அவர் மட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சூர்யகலாவை சந்திக்க சென்று வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நீதிபதியின் முன்னாள் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    First published:

    Tags: Arrested, Crime News, Madurai, Vigilance officers