முகப்பு /செய்தி /மதுரை / மதுரையில் காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்.. 6 உணவகங்களுக்கு நோட்டீஸ் - உணவு பாதுகாப்பு துறை அதிரடி!

மதுரையில் காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்.. 6 உணவகங்களுக்கு நோட்டீஸ் - உணவு பாதுகாப்பு துறை அதிரடி!

மதுரையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி

மதுரையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி

Madurai | மதுரையில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

மதுரையில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் இடையிலான காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயவீரராமபாண்டியன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 25 கிலோ சிக்கன், 5 கிலோ அழுகிய பழங்கள், 23 கிலோ காலாவதியான பரோட்டா, காலாவதியான 9 லிட்டர் குழம்பு,  தடை செய்யப்பட்ட 9 கிலோ பிளாஸ்டிக் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

Also see... மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா துவக்கம்...

25 கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், காலாவதியான உணவுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Food, Hotel Food, Madurai, Parotta