முகப்பு /செய்தி /மதுரை / சதுரங்க வேட்டை பட பாணியில் முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் - செல்லூர் ராஜு

சதுரங்க வேட்டை பட பாணியில் முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் - செல்லூர் ராஜு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

Sellur raju speech | சதுரங்க வேட்டை பட பாணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai | Madurai

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் T.M. கோர்ட் பகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுகவுக்கு தான் உரிமை உண்டு, திமுகவுக்கு உரிமையே கிடையாது. திமுக பேசுவதும், எழுதுவதும் தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு புத்தகம் எழுதினாலும், படம் எடுத்தாலும் வருமானத்தை பார்ப்பார்கள், 5 முறை ஆண்ட கலைஞர் தமிழ் வளர்ச்சிக்காக எந்த ஒரு தியாகமும் செய்யவில்லை என தெரிவித்தார்.

அந்த தியாகத்தை செய்யக் கூடிய ஒரே கட்சி அதிமுக தான், அன்றைக்கு சிங்கம்மென சீரி, புலியென பாய்ந்த வைகோ இன்று சிறுநரி ஆகிவிட்டார், புலி பூனையாகி விட்டது, திமுகவை யும் வாரிசு அரசியலையும் தாக்கி பேசிய வைகோ இன்று தன் மகனை அரசியல் வாரிசாக்கி விட்டார். வைகோவை போல் ஸ்டாலினை யாரும் திட்டியது கிடையாது. திமுக என்றாலே ஏமாற்று கட்சி தேர்தல் வரும்போது எல்லாம் சதுரங்க வேட்டை திரைப்படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் என பேசினார்.

மேலும், ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி மற்றும் அவரின் வாரிசுகள் திமுக தலைவராவார்கள், ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம். அந்த பள்ளியில் முதல் மொழி ஆங்கிலம், அடுத்த மொழியாக இந்தி உள்ளது, உதயநிதி நடத்தும் நிறுவனமான ரெட்ஜெயண்ட் தமிழ்பெயரா? சன்டிவி தமிழா? ஸ்டாலின் தமிழ் பெயரா? சின்னச்சாமி என பெயரை மாற்றலாமே, அடுத்த தேர்தலில் திமுகவை வச்சு செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் செய்ய முடியாது என்ற நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

First published:

Tags: CM MK Stalin, Local News, Madurai, MK Stalin, Sellur K. Raju, Sellur Raju