Home /News /madurai /

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு... மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு... மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது

Madurai : மதுரையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆள் சேர்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அந்த வகையில், மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், அதன் ஒருபகுதியாக மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்டபொம்மன் சிலையில் இருந்து ரயில் நிலையம் நோக்கி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்த்தினர் 50-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டோரை தடுக்க முயன்ற போலீசாருக்கும், போராட்டக் காரரகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர், போராட்டகாரர்கள் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.

Must Read : 12ம் வகுப்பு தேர்வு முடிவு... எந்த மாவட்டம் முதலிடம்? மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் இதோ

போராட்டத்தை முன்னிட்டு  100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக ரயில் நிலைய சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Published by:Suresh V
First published:

Tags: Agnipath, Madurai, Protest

அடுத்த செய்தி